minnambalm :
பாலியல்
வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் எரித்துக்
கொல்லப்பட்ட உன்னாவ் பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவு குரல்கள் அதிகரித்து வருகின்றன.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட உன்னாவ் பெண்ணை கடந்த டிசம்பர் 6ஆம் தேதி வன்கொடுமைக்கு ஆளாக்கிய சிவம், சுபம் உள்ளிட்ட ஐந்து பேர் தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 90 சதவிகித தீக்காயம் அடைந்த அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு நேற்று சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது. அங்கு அவருக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன. இதுகுறித்து அவரது குடும்பத்தினர், “முதலில் லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அங்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. குளூக்கோஸ் மட்டும் ஏற்றினர். பின்னர்தான் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்” என்று தங்களது ஆதங்கத்தைத் தெரிவித்தனர்.
பெண்ணின் சகோதரர் கூறுகையில், “இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் உயிருடன் இருக்கக் கூடாது. அவர்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட வேண்டும். எனது சகோதரியின் உடலை அடக்கம் தான் செய்ய முடியும். எரிக்க எதுவும் இல்லை.
அவள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இறுதி வரை, ’குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதனை நான் பார்க்க வேண்டும். என்னைக் காப்பாற்றுங்கள்’ என்றாள். ஆனால் அவளைக் காப்பாற்ற முடியவில்லை” என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
இந்நிலையில், உன்னாவ் பெண்ணுக்கு நீதி கேட்டு பலரும் போராடி வருகின்றனர். காங்கிரஸ் கிழக்கு உ.பி செயலாளர் பிரியங்கா காந்தி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், நாட்டில் சிறுமிகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லை என்று புகார் கூறிய அவர், இந்தக் குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
உன்னாவ் பெண் எரித்துக் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு நேற்று மாலை டெல்லியில் பொதுமக்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் மெழுகுவத்தி ஏந்தி மவுன போராட்டம் நடத்தினர். பின்னர் ராஜ்கோட் பகுதியிலிருந்து இந்தியா கேட் நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தடுப்புகளை மீறி அவர்கள் பேரணியாகச் சென்றதால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரர்களைத் தண்ணீரைப் பீய்ச்சியடித்து போலீசார் விரட்டியடித்தனர்.
முன்னதாக, உயிரிழந்த உன்னாவ் பெண்ணின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூற பாஜகவைச் சேர்ந்த கமல் ராணி வருண், பிரசாத் மௌரியா ஆகிய அமைச்சர்களும் சாக்ஷி மகாராஜ் என்ற எம்.பி.யும் அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்றனர். ஆனால், அவர்களைத் தடுத்து நிறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக