வியாழன், 12 டிசம்பர், 2019

ஆப்சண்ட்டான எம்.பி.க்கள்.. குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவின் போது கலந்துகொள்ளாமல்...


எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது
Samayam Tamil : டெல்லி: மாநிலங்களவையில் நிறைவேறிய குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதவின் போது அவைக்கு வராத எம்.பி.க்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தாலும் நீண்ட விவாதத்துக்கு பின்னரே மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியது.
மாநிலங்களவையை பொறுத்தவரை 250 உறுப்பினர்களை அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ளது. நடப்பு மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் உள்ளனர். ஐந்து இடங்கள் காலியாக இருப்பதால் தற்போதையை நிலவரப்பாடி, 240 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனுவால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆபத்தா?
இந்த நிலையில், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற பாஜகவுக்கு 121 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற சூழல் ஏற்பட்டது. ஆனால், பாஜகவுக்கு மாநிலங்களவையில் 83 உறுப்பினர்களே உள்ளனர். எனவே, அக்கட்சியை தவிர இதர உறுப்பினர்கள் 38 பேரின் ஆதரவு மசோதாவை நிறைவேற்ற தேவைப்பட்டது.

மாநிலங்களவையில் நிறைவேறியது குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா!

எனினும், மக்களவையில் நிறைவேறிய சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதராக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். வாக்கெடுப்பை புறக்கணித்து சிவசேனா வெளிநடப்பு செய்தது. மசோதாவுக்கு அதிமுக ஆதரவாக வாக்களித்துள்ளது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.

கருத்துகள் இல்லை: