சனி, 14 டிசம்பர், 2019

We were. We are We will . Secular india


Devi Somasundaram : Citizenship amendment bill ..CAB .
இரு கோடுகள் என்று ஒரு பால சந்தர் படம்.அதில் ஒரு கோட்டை சின்னதாக காட்ட அதன் அருகில் பெரிய கோடு வரைந்தால் முதல் கோடு சிறியதாகிடும் என்று கூறி இருப்பார் . அமித் ஷா அரசு ஒவ்வொரு பிரச்சனையையும் சரி செய்ய முயலாமல் அடுத்து அடுத்து பெரிய கோடு போடுகிறது. காஷ்மீர் 370, அயோத்தி, எகானமி, CAB, அடுத்து
பொது சிவில் சட்டமா என்று தெரியவில்லை.. தெளிய வச்சு தெளிய் வச்சிலாம் இல்ல..தெளியவே விடாம அடிக்கிது
மூன்று அண்டை மாநிலத்தில் இருந்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை கிடையாது என்று குறிப்பிட்டு .இஸ்லாமிய மதத்தை மட்டும் தவிர்த்து , ஈழத்தில் இருந்து வருபவர் பற்றி எந்த தகவலும் இல்லாமல் அவசர அவசரமாக இயற்றப்பட்ட சட்டம் ஒரு வகையில் மக்களை இந்திய பொருளாதார பிரச்சனயை மறக்க வைத்து இருக்கின்றது ..
அவர்கள் போட்ட கணக்கை தாண்டி பில் பாஸ் செய்யப் பட்ட அன்றே டெல்லி உஸ்மானியா பல்கலை மாணவர்கள் போராட்டம் செய்தனர் .கடும் தடியடி செய்து அரசு அதை அடக்கியது .அந்த தகவல் வெளிலயே வராமல் பார்த்து கொண்டது .ANI ல ஒரு சின்ன காலம் தவிர அந்த செய்தி எதிலும் வரவில்லை
..
அடுத்து அஸ்ஸாமில் துப்பாக்கிச் சூடு வரை போனது ..அமித் ஷா தன் அஸ்ஸாம் பயணத்தை ரத்து செய்தார் ..அதையும் வெகுஜன ஊடகம் எதுவும் பேசவில்லை.
கல்கத்தாவில் ரயில் மறியல் ,சாலை மறியல் மக்கள் போராட்டம் என்று இன்று வரை தொடர்கிறது .. அதையும் எந்த ஊடகமும் பேசவில்லை.
திருவனந்தபுரம் , மும்பையில் ஐ ஐ டி மாணவர்கள் , மற்றும் கட்சியினர் போராட்டம் நடந்து அவசர அவசரமாக கலைக்கப் பட்டது
தமிழ்நாட்டில் திமுக சார்பில் CAB நகல் கிழிப்பு போராட்டம் எந்த வெகு ஜன ஊடகத்திலும் பேசப் படவில்லை .
அமித் ஷா அரசு தனக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை பதிவு செய்யவிடாமல் தடுப்பதன் மூலம் மறைத்து விடலாம் என்று நினைக்கின்றது ..
உண்மயை சந்திக்க துணிவில்லாத பிரதமர் ஊடகம் எதையும் சந்திப்பதுமில்லை ..பதில் சொல்வதுமில்லை .
பேய்கள் அரசாண்டால் பினம் தின்னும் சாத்திரங்கள் .
#i_oppose_CAB
#NotinMyName
#தேவி.

கருத்துகள் இல்லை: