திங்கள், 9 டிசம்பர், 2019

வெங்கடேச பண்ணையார் என்கவுண்டர் ... ஒரு மலையாளிக்காக மலையாளி போலீஸ் செய்த கொலை

விஜயகுமார் IPS .. செப்டம்பர் 15, 1952 ஆம் ஆண்டு கிருஷ்ணன் நாயர், கௌசல்யா தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் செயின்ட் ஜோசப் கல்லூரி திருச்சிராப்பள்ளியில் இளங்கலை பட்டமும், மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இவர் 1975ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணிக்குத் தேர்வானார். இவரது தந்தை ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஆவார்.
Sadhu Sadhath : என்கவுண்டரை ஆதரிக்கும் திமுகவினருக்கு!
ராதிகா செல்வி முன்னாள் தூத்துக்குடி எம்பி யாருனு தெரியுமா ... அவங்க கர்பவதியா இருக்கும் போது தாலியறுத்தது எப்படினாச்சும் தெரியுமா ???
வெங்கடேச பண்ணையார் யாருன்னாச்சும் தெரியுமா ??
 இவர் தான் ராதிகா செல்வி கணவர் .. சென்னை லயோலா கல்லூரி வாசலின் எதிரே உள்ள அபார்ட்மெண்டில் உள்ள வீட்டினுள் வைத்து ஒரு சுபயோக தினத்தில் அதிகாலை 5 1/2 மணிக்கு என்கவுண்டர் செய்யப்பட்டார் ...
காரணம் பெரிய வழக்கெல்லாம் இல்லை உபியின் உன்னாவோ பிஜெபி எம்எல்ஏ போல பெண்ணை கற்பழித்து
கேட்கப்போன தந்தையை அடித்து கொன்று பிறகு வழக்கிற்க்காக கோர்ட்டு செல்லும் வழியில் லாரியை வைத்து மோதி தாய் மாமன் வக்கீல்னு யாரையும் கொல்லல .. ரொம்ப சிம்பிள் காரணம் வெங்கடேச பண்ணையாருக்கும் மளையாளி ஒருத்தனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு .. வெங்கடேச பண்ணையார் பணம் கொடுக்காமல் ஏமாற்றிய மளையாளியை மிரட்டியதால் .. அந்த மளையாளி தன்னோட மளையாளி ப்ரண்ட் வீரப்பன் என்கவுண்டர் புகழ் விஜயகுமாரிடம் சொல்ல .. விஜயகுமார் வெங்கடேச பண்ணையார் தங்கியிருந்த வீட்டுக்கு போலீசோட போய் சிம்பிளா டுமீல் டுமீல்னு போட்டுட்டான் ...

போட்டுட்ட பிறகு சொன்னது விசாரிக்க போன போது தன்னையும் தன்னோட சக போலீசையும் கொல்ல முயற்ச்சி செஞ்சதால தற்காப்புக்கு டப்பு டப்புனு சுட்டோம் பொட்டுனு போயிட்டான்னு ... அதன் பிறகு அது பெரிய விவகாரம் ஆகி ஜெயா விஜயகுமாரை எப்படி எல்லாம் காப்பத்தி மத்திய அரசு பணிக்கு பாதுகாப்பா அனுப்பி வச்சதுனு நக்கீரன்ல அப்ப வந்த செய்திகளை தோண்டி எடுத்து படிக்கவும் ...
கணவன் செத்து சில மாதங்களில் கைக் குழந்தையோட நிர்கதியா நின்ன அந்த பெண்ணை கலைஞர் எம்பி சீட் கொடுத்து ஜெயிக்க வச்சு எம்பியாகவும் ஆக்கினார் .. எம்பி ஆன பிறகும் கூட விஜயகுமாரோட கூந்தலில் ஒத்த முடியகூட புடுங்க முடியல ... அதன் பிறகு விஜயகுமார் ஆபரேசன் நக்சல் எனும் பெயரில் எத்தனை அப்பாவிகள் உயிரை பறித்தான்னு இரண்டு நாட்கள் முன்பு ஒரிசா சட்டசபையில் தாக்கலான கமிஷன் ரிப்போர்ட் பற்றிய செய்திகளை படிச்சு பாக்கவும் ஒரே கிராமத்தில் 20 பேர் அத்தனை பேரும் அப்பாவிகள் அதில் பெண்களும் குழந்தைகளும் சிறுவர்களும் அடக்கம் .. பதினைந்து வருடம் கழித்து இப்ப தான் செத்தவர்கள் அப்பாவிகள்னு கமிஷன் ரிப்போர்ட் வந்திருக்கு ...
இத்தனைக்கும் வெங்கடேச பண்ணையாருனா தூத்துக்குடியில அவ்வளவு பெரிய பாரம்பரிய குடும்பத்து தலகட்டு அவரை சாதாரணமா போட்டுட்டானுங்க .. ஆகவே போலீஸ் சொல்றதை எல்லாம் கண்ண மூடிட்டு ஆதரிக்கும் முன்பு என்கவுண்டர் செய்யப்பட்டதின் பின் உள்ள நோக்கத்தையும் சூழ்நிலையயும் ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள் கலைஞர் இருந்தால் என்ன சொல்லியிருப்பாருனு யோசிக்கவும் ...
குற்றவாளிகள் பணக்காரனாகவோ மேல் சாதிக்காரனாகவோ இருந்தால் வெடிக்காத துப்பாக்கி ஏழை எளியவர்கள் மீது மட்டும் ஏன் வெடிக்குதுனு பாக்கவும் ... அப்புறம் உங்க இஷ்டம் ...

கருத்துகள் இல்லை: