செவ்வாய், 10 டிசம்பர், 2019

அமித் ஷாவிற்கு தடை விதிக்க அமெரிக்கா ஆணையம் .. வீடியோ | USCIRF seeks sanctions against Amit Shah


மக்கள் எல்லோரும் ஒற்றுமை வியப்பு இல்லை tamil.oneindia.com - shyamsundar.: அமித் ஷாவிற்கு தடை விதிக்க அமெரிக்கா ஆணையம் பரிந்துரை | USCIRF seeks sanctions against Amit Shah நியூயார்க்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு எதிராக அமெரிக்க அரசிடம் சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் வைத்துள்ள கோரிக்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு விரைவில் சட்டமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு உடனே தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் எனப்படும் USCIRF கோரிக்கை விடுத்துள்ளது.
மத ரீதியாக மக்களுக்கு குடியுரிமை வழங்குவது தவறானது. முழுக்க முழுக்க தவறான திசையில் இந்த சட்டம் செல்கிறது. இந்தியாவின் வரலாறு இது கிடையாது. இந்தியா எப்போதும் இப்படி மதத்தை அணுகியது கிடையாது. ஆனால் இப்போது நிலைமை மோசமாகிவிட்டது, என்று USCIRF தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


வியப்பு இல்லை ! இதற்கு தற்போது மத்திய அரசு சார்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில் சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் இப்படி எங்களுக்கு எதிராக கோரிக்கை வைப்பது எங்களுக்கு வியப்பளிக்கவில்லை. அவர்களின் கடந்த கால செயல்பாடு என்னவென்று எங்களுக்கு தெரியும்.அவர்கள் எப்போதும் இப்படித்தான் செயல்பட்டு வந்து இருக்கிறார்கள்.

என்ன கருத்து ! ஒரு பக்கத்து கருத்துக்களை கேட்பது, ஒரு பக்க நிலைப்பாட்டை எடுப்பது என்று சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் நிறைய தவறுகளை செய்துள்ளது. இப்போதும் அப்படித்தான் அவர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள். எப்போதும் அவர்கள் இப்படித்தான்.

அறிவு இல்லை அவர்களுக்கு இந்தியா குறித்தும், இந்த சட்டம் குறித்தும் போதிய அறிவு இல்லை. அவர்கள் குடியுரிமை சட்டம் குறித்து சொன்னது எதுவும் உண்மையும் இல்லை, சரியானதும் இல்லை. இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினர் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள். இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் இவர் தலையிட கூடாது.

 மக்கள் எல்லோரும் ஒற்றுமை ! குடியுரிமை சட்டம் மற்றும் என்ஆர்டி பதிவேடு இரண்டும் இந்தியாவை விட்டு யாரையும் வெளியே அனுப்பாது. இது இந்திய குடியுரிமை உறுதி செய்வது. மற்ற நாடுகளில் கஷ்டப்படும் மக்களுக்கு அடைக்கலம் தருவது. இதேபோல் சட்டங்கள் அமெரிக்காவிலும் குறிப்பிடத்தக்கது என்று இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: