நக்கீரன் பி.அசோக்குமார் :
அமைச்சர் ஜெயக்குமார் வாட்ஸ் அப்பில் ஒரு பெண்ணிடம் பேசுவது போன்று ஒரு ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும். இல்லையென்றால் முதல் அமைச்சர், அளுநர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றே அவதூறு பரப்புகின்றனர். என்னை நேரடியாக எதிர்க்க திராணி இல்லாதவர்கள் போலியான ஆடியோவை தயார் செய்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார்கள். நான் ஒருவன்தான் டி.ஜெயக்குமார் என்று இருக்கிறேனா. ஆடியோவில் இருப்பது என் குரல் அல்ல. போலியாக ஆடியோ வெளியிட்டவர்களின் பின்னணியில் சசிகலா, தினகரன் குடும்பத்தினர் உள்ளனர். ஆடியோ பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆடியோ திட்டமிட்ட சதி என்று கூறினார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக