வெப்துனியா சமீபத்தில் பிரதமர் மோடிக்கு ஒரு பெண்
மேக்கப் போடுவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி வைரலானது. இதனையடுத்து
ரூ.15 லட்சம் சம்பளம் கொடுத்து பிரதமர் மோடி அந்த பெண்ணை மேக்கப் போட
நியமித்துள்ளதாக வதந்திகள் பரவியது.
உண்மையில் அந்த பெண், பிரதமரின் மெழுகு சிலை தயாரிக்க அவரை அளவெடுக்க வந்த
பெண் என்றும், ஒருசிலர் மேக்கப் போடும் பெண் என தவறான தகவல்களை பரப்பி
வருவதாகவும் பிரதமர் அலுவலகம் இதுகுறித்து
விளக்கமளித்துள்ளது.லண்டன் அருங்காட்சியகத்தில் பிரதமர்
நரேந்திர மோடியின் மெழுகு சிலை கடந்த 2016ஆம் ஆண்டு வைக்கப்பட்ட போது
அளவெடுக்க வந்த பெண் தான் புகைப்படத்தில் உள்ள பெண் என்பது உறுதி
செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக