tamil.thehindu.com-பிடிஐ:ராய்பூர்,
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடி செய்து வெளிநாட்டில் தலைமறைவாக
வாழும் மெகுல்சோக்சியிடம் இருந்து நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் மகள்
பணம் பெற்றுள்ளார் என்று காங்கிரஸ்தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு
குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இன்று நடைபெற்ர விவசாயிகள் பேரணியில் பங்கேற்ற ராகுல் காந்திபேசியதாவது: ”பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்ற வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி. இதில் மெகுல் சோக்சியிடம் இருந்து அருண் ஜேட்லியின் மகள் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார். அவரின் வங்கிக் கணக்குக்கு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விவகாரத்தை இன்று வெளிக்கொண்டு வந்தும் அதற்கு ஊடகங்கள் அதிகமாக முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஏனென்றால், ஊடகங்களின் குரல் ஒடுக்கப்படுகின்றன, மிரட்டப்படுகின்றன. ஆனால், உண்மையை வெளிப்படுத்த வேண்டியது ஊடகங்களின் பொறுப்பு. ராணுவம் எல்லையைக் காப்பதுபோல் செயல்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் தனது மகள் தொடர்புகொண்டிருக்கிறார் என்பதால், நிதி அமைச்சர் ஜேட்லி, மெகுல் சோக்சிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ரபேஃல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில், 126 விமானங்களை (ஒவ்வொரு
விமானத்தையும் ரூ.560 கோடிக்கு) வாங்க காங்கிரஸ் அரசு பிரான்ஸ்
நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், மோடி அரசு அந்த ஒப்பந்தத்தை
ரத்து செய்தது.
மாறாக, பிரான்ஸ் நாட்டுக்கு அனில் அம்பானியுடன் சென்ற பிரதமர் மோடி, ஒவ்வொரு விமானத்தையும், ரூ.1,600 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தார்.
விமான உதிரிபாகங்கள் தயாரிப்பை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு வழங்க நாங்கள் ஒப்பந்தம் செய்திருந்தோம். இதன் மூலம் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு கிடைக்கும், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்த பிரதமர் மோடி, அனுபவம் இல்லாத, புதிதாகத் தொடங்கப்பட்ட அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளித்துள்ளார்.
பிரதமர் மோடி விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும் காவல்காரர் இல்லை. அம்பானிக்கு மட்டுமே அவர் காவல்காரர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில் விவசாயிகளின் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உணவு பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்கப்படும், விவசாயிகள் தங்களின் விளைபொருட்களைப் பாதுகாத்து தேவையான நேரத்தில் விற்பனை செய்யலாம்”.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இன்று நடைபெற்ர விவசாயிகள் பேரணியில் பங்கேற்ற ராகுல் காந்திபேசியதாவது: ”பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்ற வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி. இதில் மெகுல் சோக்சியிடம் இருந்து அருண் ஜேட்லியின் மகள் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார். அவரின் வங்கிக் கணக்குக்கு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விவகாரத்தை இன்று வெளிக்கொண்டு வந்தும் அதற்கு ஊடகங்கள் அதிகமாக முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஏனென்றால், ஊடகங்களின் குரல் ஒடுக்கப்படுகின்றன, மிரட்டப்படுகின்றன. ஆனால், உண்மையை வெளிப்படுத்த வேண்டியது ஊடகங்களின் பொறுப்பு. ராணுவம் எல்லையைக் காப்பதுபோல் செயல்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் தனது மகள் தொடர்புகொண்டிருக்கிறார் என்பதால், நிதி அமைச்சர் ஜேட்லி, மெகுல் சோக்சிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக, பிரான்ஸ் நாட்டுக்கு அனில் அம்பானியுடன் சென்ற பிரதமர் மோடி, ஒவ்வொரு விமானத்தையும், ரூ.1,600 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தார்.
விமான உதிரிபாகங்கள் தயாரிப்பை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு வழங்க நாங்கள் ஒப்பந்தம் செய்திருந்தோம். இதன் மூலம் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு கிடைக்கும், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்த பிரதமர் மோடி, அனுபவம் இல்லாத, புதிதாகத் தொடங்கப்பட்ட அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில் விவசாயிகளின் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உணவு பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்கப்படும், விவசாயிகள் தங்களின் விளைபொருட்களைப் பாதுகாத்து தேவையான நேரத்தில் விற்பனை செய்யலாம்”.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக