tamilthehindu :டெல்லியில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்த காங்கிரஸ்
தலைவர் ராகுல் காந்தி சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் செல்ல மோடி அரசு கூறியது சட்டவிரோதம். அரசியலமைப்புச் சட்டத்துக்கு செய்த அவமதிப்பாகும் என்று மத்தியஅரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடினார்.
ஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை நீக்க மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து இணை இயக்குநர் எம். நாகேஸ்வர் ராவ் இடைக்கால இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில், தற்போது அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரின் நிலை என்ன என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அலோக் வர்மா, அஸ்தானா நீக்கம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ரஃபேல் போர்விமான ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்கத் தொடங்கிவிடும் என்ற அச்சத்தால், சிபிஐ இயக்குநரை அவசரஅவசரமாக மத்தியஅரசு நீக்கியுள்ளது.
ஆனால், சிபிஐ இயக்குநர் நியமனம் மற்றும் நீக்கம் என்பது 3 பேர் கொண்ட குழுவால் மட்டும்தான் செய்ய முடியும். அதாவது பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கொண்ட குழுதான் இதற்கு அதிகாரம் படைத்தது. ஆனால், அதிகாலை 2 மணிக்கு சிபிஐ இயக்குநர் நீக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் இந்தச் செயல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு நேர்ந்த அவமானம், தலைமை நீதிபதியை அவமதித்தது போலாகும், தேசத்தின் மக்களை இழிவுப்படுத்தியது போன்றதாகும்.
ஒட்டுமொத்தத்தில் சிபிஐ இயக்குநரை நீக்கியது சட்டவிரோதம், கிரிமினல் குற்றமாகும்.
சிபிஐ இயக்குநரை நீக்கியவிஷயத்தில் பிரதமர் மோடி மிகவும் அச்சமடைந்துள்ளார். ஊழல் செய்துவிட்டோம், சிபிஐ அமைப்பில் சிக்கிவிடுவோம் எனப் பயத்தில் பதற்றத்துடன் இருக்கிறார். சிபிஐ இயக்குநரை நீக்கமட்டும் செய்யவில்லை, அவரின் அறையையும் பூட்டி சீல் வைத்துள்ளனர். அவரின் அறையில் இருந்த முக்கியமான ஆவணங்கள் அங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அதிகாலை 2 மணிவரை அங்கு அதிகாரிகள் வேலை செய்துள்ளனர். ஆதாரங்களை அழிக்க முயற்சித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிபிஐ இயக்குநர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பின் ஏன் அவர் நியமிக்கப்பட்டார் தெரியுமா ஏனென்றால், அவரைத்தான் பிரதமர் கட்டுப்படுத்த முடியும், ரஃபேல் போர்விமான ஒப்பந்த ஊழல் குறித்து எந்தவிதமான விசாரணையும் செய்யாமல் இருக்க முடியும்.
டசால்ட் நிறுவனம் விஷயத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்திருப்பீர்கள். இந்திய அரசு எதைக் கேட்டதோ அதைத் தவிர வேறு ஏதும் சொன்னார்களா. பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலண்டேதான், பிரதமர் மோடியுடன் ரஃபேல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். ஆனால், ஹோலண்டே என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார். டசால்ட் நிறுவனம் அறிக்கை வெளியிடும்முன்பே நமது பாதுகாப்பு அமைச்சர் டசால்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையை பார்வையிடச் சென்றுவிட்டார்
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக