Vishnupriya R
ONEINDIA TAMIL ON திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு மாணவியின் உறவினர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
செங்கம் அருகே உள்ள மேல்நாச்சிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக உள்ளநர் கண்ணன். இவர் ஆயுதபூஜை விடுமுறைக்கு முன் பத்தாம் வகுப்பு மாணவியை சிறப்பு வகுப்புக்கு அழைத்து அவரது ஆடையை விலக்க சொன்னதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பூஜை விடுமுறைகள் முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அந்த மாணவி பள்ளிக்கு செல்லமாட்டேன் என பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அப்போது ஏன் என கேட்டதற்கு கண்ணன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து பெற்றோர்களும், 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களும் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது வகுப்பறையில் கண்ணன் பாடம் எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்த மாணவியின் உறவினர்கள் அவர் மீது தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தலையில் பலத்த காயம் அடைந்த கண்ணன் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக