வெள்ளி, 26 அக்டோபர், 2018

ரஜினிகாந்த் குறித்து திமுக கடும் தாக்கு? முரசொலி கூறும் அந்த கறுப்பு ஆடு?

ndtv.com-vinoth-ravi : "யார் அந்த பிளாக் ஷீப்? ரஜினிகாந்த் குறித்து திமுக கடும்
தாக்கு!" 30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிட முடியாது என்ற ரஜினிகாந்தின் கருத்திற்கு, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ரஜினிகாந்தை திமுக கடுமையாக சாடியுள்ளது. மேலும் அதில், நடிகர் ரஜினிகாந்த் சில நபர்களின் கைகளில் கைப்பாவையாகவும், மற்றும் வகுப்புவாத சக்திகளின் ஆதரவிலும் உள்ளதாக அவர் மீது திமுக கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்காக அவரது ரசிகர் மன்றத்தை ‘ரஜினி மக்கள் மன்றம்' என்று பெயர் மாற்றி அறிவித்தார். இதைத்தொடர்ந்து, கடந்த செவ்வாயன்று ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த வருடம் மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின் போதே, “நான் அரசியலுக்கு வந்தால் அதை வைத்துப் பதவி வாங்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்க மாட்டேன். அப்படிப்பட்டவர்கள் இப்போதே விலகி விடுங்கள்” என்று நான் தெளிவாகக் கூறியிருந்தேன்.

நான் சொன்னது வெறும் பேச்சுக்காக இல்லை. அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத் தான் நாம் அரசியலுக்கு வருகிறோம். வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது என்று தான் அர்த்தம். மக்களுடைய ஆதரவு இல்லாமல் அரசியலில் நாம் நினைத்ததைச் சாதிக்க முடியாது.
30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிட முடியாது. மன்றத்திற்காக உண்மையாக உழைக்கும் எல்லோருடைய செயல்பாடுகளையும் நான் நன்கு அறிவேன். அந்த உழைப்பு வீண் போகாது என்று அதில் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திமுகவின் அதிகார்ப்பூர்வ நாளேடான முரசொலியில் இன்று, ரஜினிகாந்திற்கு அவரது அப்பாவி ரசிகன் கேள்வி எழுப்புவது போல கேள்வி பதில் வடிவிலான ஒரு முழுபக்க கட்டுரையை சிலந்தி என்ற புனைவுப் பெயிரில் வெளியிட்டுள்ளது. அதில், அரசியலுக்கு வருவது பதவி வாங்க அல்ல, என்றால் வரும் சட்டசபை தேர்தலில் எல்லா இடங்களிலும் போட்டியிடுவோம் என அறிவித்தது ஏன்? பதவிக்காக அரசியல் இல்லை என்றால் பெரியாரைப்போல கட்சி ஆரம்பித்து கொள்கையில் உறுதியாக நின்று போராட வேண்டியதுதானே.
ஊடகங்களில் உனக்காக குரல் எழுப்புபவர்கள் எல்லாம் மத வெறியர்கள். சாதி, மதம் கடந்து ஒற்றுமையாக வாழும் தமிழ் சமுதாயத்தை கலவர பூமியாக்கிட நினைப்பவர்கள். இது பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோர் பதப்படுத்திய மண். திராவிடத்துக்கு எதிராக செயல்படும் எவரும் தலை தூக்க முடியாது.
ஆனால் ஒரு கூட்டம் எங்களால் ஏற்பட்ட உங்கள் புகழை அழிக்க நினைக்கிறது. அந்த கூட்டத்தின் கைப்பாவையாகி அவர்கள் ஆட்டுவிக்கும்படி ஆடுவது உங்கள் புகழின் அழிவுக்கு வழி வகுத்து விடும். உன்னை எங்களின் சுவாசக் காற்றாய் நினைத்து செயல்பட்ட எங்களை தூக்கி எறிந்து விட்டாய்.

COMMENT
உன்னை நம்பி நாங்கள் ஆடிக் கொண்டு இருந்தோம். ஆனால் நீயோ யாருடைய கயிற்று அசைவிலோ ஆடும் பொம்மையாகி விட்டாய் என கூறியுள்ளது. மேலும் முடிவில், யார் அந்த பிளாக் ஷீப்...மே... மே... என இந்திரன் பட வசனத்தை கொண்டு கேள்வி எழுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை: