1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்த்த்தின் ஊடாக அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13ஆம் திருத்தச் சட்டம் மூலமாக இலங்கையில் மாகாணசபை முறமைகள் உருவாக்கப்பட்டன.
இதனூடாக 1988ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு
மாகாணங்களை இணைத்து ஒரே மாகாணமாக நடாத்தப்பட்ட தேர்தலில் முதலமைச்சராக
வரதராஜபெருமாள் தெரிவுசெய்ப்பட்டார். ஆனால் அம் மாகாண சபை தொடர்ந்து
நீடிக்காமலே அவர் இந்தியா சென்றிருந்தார்.
இவ்வாறான நிலையில் அதன் பின்னரும் நிர்வாக
ரீதியாக ஒன்றாக இருந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் 2006ஆம் ஆண்டு
வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்பொன்றின் மூலமாக தனித் தனி மாகாணமாக
பிரிக்கப்பட்டது.
இதன் பின்னர் வடக்கு மாகாணத்திற்கான
தேர்தலானது கடந்த 2013ஆம் ஆண்டு முதல் முறையாக நடாத்தப்பட்டு வடக்கு மாகாண
சபை தனது ஆட்சியை தொடங்கியிருந்த்து.
25.10.2013 அன்று தனது ஜந்தாண்டு கால
தமிழர் ஆட்சியை தொடங்கிய வடக்கு மாகாண சபையானது இன்றைய தினத்துடன்
சம்பிரதாயபூர்வமாகவும் நாளை நள்ளிரவுடன் (24.10.2018)உத்தியோகபூர்வமாகவும்
தனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது.
இந்நிலையில் பல நிலை பாதைகளை கடந்து வந்த
இம் மாகாண சபையின் கடந்த ஜந்தாண்டு கால பயணம் தொடர்பாகவும், எதிர் வரும்
மாகாண சபை எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாகவும் தற்போதைய
முதலமைச்சர், அவைத் தலைவர், எதிர்கட்சி தலைவர் மற்றும் அதிக ஆசனங்களை
பெற்றுக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலமைகள்
ஆகியோர் பகிர்ந்து கொண்டவற்றை உங்களிற்கு தொகுத்து தந்திருக்கின்றோம்.
சீ.வி.விக்கிணேஸ்வரன் : முதலமைச்சர், வடக்கு மாகாணம்.
பதில் 01 : பல வித
தடைகளுக்கு மத்தியில் முடிந்ததைச் செய்துள்ளோம். நாம் செய்தனவற்றை கைநூலாக
வெளிக்கொண்டு வந்துள்ளோம். அதில் காணப்படும் எனது பின்னுரை உங்கள்
கேள்விகளுக்குப் பதில் அளிப்பதாய் அமைந்துள்ளது. பிரதியொன்று 23 ஆம் திகதி
உங்களுக்கு அனுப்பப்படும்.
பதில் 02 : ஒற்றுமையுடன்
செயற்படும் ஒன்றாக இருக்க வேண்டும். இம்முறை எமக்கு தொந்தரவுகள்
தந்தவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் திரும்பவும் எம்மைத்
தடைசெய்ய அனுமதி அளிக்கக் கூடாது. ஆனால் அதற்கிடையில் ஆளுநர் பல
நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளார். எமக்கு தொந்தரவுகள் தந்தவர்கள் ஆளுநருடன்
கூட்டுச் சேர விரும்பியுள்ளார்கள் என்று அறிகின்றேன்.
நாம் விளிப்புடன் அவரின் செயல்களை நோக்க வேண்டும். அவை சம்பந்தமாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.
பதில் 01: இம் மாகாண
சபையில் முதலமைச்சர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கிடையே இருந்த கோபம்,
விட்டுக்கொடுப்பின்மை, ஈகோ போன்றவற்றால் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவையை
இம் மாகாண சபை செய்ய தவறிவிட்டது. கடந்து வந்த ஜந்தாண்டு காலத்திலே
முழுமையாக தோல்வியில்லை. ஆனால் முனைப்போடு செய்திருக்க
வேண்டியவற்றை,செய்யப்படவில்லை.
மக்களின் பிரச்சனைகள் தொடர்பாகவும்,
அவப்போது எழும் பிரச்சனைகள் தொடர்பாகவும் இம் மாகாண சபையை ஜனநாயக ரீதியான
சட்டரீதியான தளமாக கொண்டு அப் பிரச்சனைகள் தொடர்பாக பேசியுள்ளோம். இச்
சபையில் வினைத்திறன் அற்ற அமைச்சுக்கள் இருந்துள்ளது. மக்களின் பொருளாதார
ரீதியாக , வாழ்வாதார ரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை.
பதில் 02 : உருவாகும்
புதிய சபையின் உறுப்பினர்கள் அமைச்சர்கள் கல்வி திறனோடு நடமுறை நிர்வகம்
தெரிந்தவர்களாகவும், அரசியல் தெரிந்தவர்களாகவும், இருக்க வேண்டும்.
அத்தகையவர்களை கொண்ட சபையே உருவாக வேண்டும். இது இல்லாமையே இதுவரை இருந்த
பிரச்சனைகளுக்கு காரணமும் ஆகும்.
வருகின்றவர்கள் மக்களை
தெரிந்தவர்களாகவும், மக்களது பிரச்சனைகளை தெரிந்தவர்களாகவும், அரசியல்
தெரிந்தவர்களாகவும், குறிப்பாக நிர்வாகம் தெரிந்தவர்களாகவும் இருக்க
வேண்டும். அமைச்சர்கள் தமது அமைச்சினை கொண்டு நடாத்தகூடியவர்களாக அதற்கான
தகுதியையும், நம்பிக்கையையும் கொண்டவர்களாக, அரசியலையும் கொள்கையையும்
சரியாக கொண்டு செல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
இத்தகைய ஆற்றல் இல்லாதவர்களை கொண்ட சபையாக எதிர்வரும் சபை அமைந்தால் இப்போதிருந்த சபையைவிட மோசமான சபையே உருவாகும்.
பதில் 01 : மாகாண சபையின் கடந்த ஜந்து
வருடங்களையும் கூறுவதாயின் மிக நீண்ட நேரம் தேவை. ஒரு சில நிமிடங்கள்
போதாது. எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற போது இம் மாகாண சபை கடந்த ஜந்து
வருடங்களாக எதனையுமே செய்யவில்லை. அரசாங்கத்திடம் இருந்து நிதிகளை பெற்று
அபிவிருத்திகளை செய்வது ஒன்று, புலம்பெயர் வளங்களை ஒன்றினைந்து அதனூடாக
அபிவிருத்தி செய்வது, நியதிச் சட்டங்களை உருவாக்கி மாகாண சபையை
பலப்படுத்துவது இவை உட்பட எதனையுமே இம் மாகாண சபை செய்யவில்லை.
பதில் 02 : மாகாண சபைக்கு அதிகாரம் போதாது
என்று சொல்பவர்கள் இதற்கு வரக்கூடாது. அதற்காக மாகாண சபைக்கு அதிகாரங்கள்
கூரையை பிய்த்துக்கொண்டு இருக்கிறது என்றில்லை. ஆனால் இருக்கின்ற
அதிகாரங்களை செழுமையாகவும் திறம்படவும் செயற்படுத்தகூடிய ஆளுமை கொண்ட
விடயங்களை தெரிந்த இளையவர்கள் புதிய சபைக்கு வர வேண்டும்.
பதில் 01 : இம் மாகாண சபை உருவாகிய போது
சிறிய ஈழம் கிடைத்தது போலவே மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இன்று அவை
ஏமாற்றமாகவே அமைந்துவிட்டது. பெரிதாக எதனையும் இச் சபை செய்யவில்லை. மாகாண
சபை உறுப்பினர்களே முதலமைச்சரை செயற்படவிடாமல் செய்துள்ளார்கள். அதேநேரம்
முதலமைச்சரும் செய்யகூடியவற்றை செய்யாமல் விட்டுள்ளார்.
இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியான
நேரத்தில் தலையிட்டு ஒழுங்கான சபையை நடாத்த வழி ஏற்படுத்தியிருக்க
வேண்டும். கூட்டமைப்பு இதில் தவறு விட்டிருக்கிறது. அதே நேரம் முதலமைச்சரை
செயற்படாமல் விடாமலும் சில சக்திகள் செயற்பட்டிருந்தார்கள்.
பதில் 02 : மிகவும் குழப்பகரமான சபையே
உருவாகும் வாய்ப்புள்ளது. எனவே இவற்றை தவிர்த்து மக்களது தீர்க்கப்பட
வேண்டிய பல பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் வகையில் சரியான சபையை உருவாக்க
ஒன்றினைய வேண்டும். இம் மாகாண சபைக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களே உள்ளது.
அதில் பணியாற்றுவது கடினமே. ஆனாலும் நாமாகவே துனிந்து செயற்பட்டால் அதனை
செய்ய கூடியதாக இருக்கும்.
பதில் 01 : முழுமையாக
எதனையுமே செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கம்
ஒத்துழைத்திருந்தால் இன்னும் காத்திரமான வேலைத்திட்டங்களை செய்திருக்க
முடியும்.
இப்போதிருந்தவர்கள் மாகாண சபைக்கு
புதியவர்கள். இவர்கள் தமக்குள்ள அதிகாரங்களை கொண்டு பலவற்றை செய்திருப்பதாக
கூறப்படுகின்றது. ஊழல் குற்றச்சாட்டுக்கள் அமைச்சர்கள் மீது
முன்வைக்கப்பட்ட போது அவர்களை நீக்கி புதியவர்களை நியமித்து நிர்வாகத்தை
ஓரளவு செப்பனாக கொண்டு போயுள்ளார்கள். ஆனாலும் இதிலும் விட கூடுதலாக
செய்திருக்கலாம் என்பதில் சில உண்மை தன்மையுண்டு.
வேலைவாய்ப்பு தொடர்பாக காத்திரமான
பங்களிப்பை செய்யவில்லை என்பது உண்மை. ஆனால் அதற்காக வெளிநாட்டு முதலீடுகளை
இங்கு கொண்டு வருவதற்கான அதிகாரம் இவர்களுக்கு இருந்திருக்கவில்லை.
அதிகாரிகள் ஒத்துழைக்காமையும், அரசாங்கம்
ஒத்துழைக்காமையாலும் பல காத்திரமான விடயங்களை செய்ய முடியாமல் போயுள்ளது.
ஆனாலும் தன்னால் இயன்றளவு வடக்கு மாகாண சபை செய்திருக்கின்றது.
பதில் 02 : புதிய மாகாண
சபை இரண்டு விடயங்களை கவனத்தில் எடுக்க வேண்டும். ஒன்று அபிவிருத்தி
மற்றொன்று அதிகாரம் தொடர்பாக. ஏற்கனவே இருந்த அதிகாரங்கள் கூட பகிரப்படாமல்
உள்ளது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பாராளுமன்றத்தோடு தொடர்பு கொண்டு
அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கும், மத்திய அரசிடம் இருந்து உதவிகளை
பெறுவதற்கும் செயற்பட வேண்டும்.
நீண்ட கால குறுகிய கால திட்டங்கள்
வகுக்கப்பட்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
வேலைவாய்ப்புக்களை உருவாக்க கூடிய துறைகளை இனங்கண்டு அதனை முன்னெடுத்து
செல்ல வேண்டும்.
பதில் 01 : நல்ல விடயங்களும்
நடந்திருக்கிறது. அதே நேரம் திருப்தியில்லாத விடயங்களும் நடந்திருக்கிறது.
எங்களுக்குள்ளேயே முரண்பட்டுக்கொண்டமையானது மாகாண சபை மீது மக்களுக்கு
இருந்த ஆர்வத்தை சோரம் போகச் செய்துவிட்டது. மீளக் குடியேற்றம்
செய்யப்படும் போது மக்கள் மாகாண சபையை எதிர்பார்த்தார்கள். ஆனால் அதனை
மாகாண சபை நிறைவேற்றவில்லை.
அபிவிருத்திகளில் மக்களிடம் எதிர்பார்ப்பு
இருந்த்து. ஆனால் அவற்றில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை. அரசாங்கம்
கொடுக்கும் பணத்தை மாத்திரம் பயன்படுத்த நினைத்தார்களே தவிர வெளிநாட்டு
முதலீடுகளை கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை. ஆனால் இனப் பிரச்சனை விடயத்தில்
காத்திரமான பங்களிப்பை செய்துள்ளது.
பதில் 02 : இச் சபை விட்ட தவறுகளை இனி
வரும் சபை உதாரணமாக பயன்படுத்த வேண்டும். உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருக்க
வேண்டும். தமக்குள்ளயே முரண்பட்டு எதிர்கட்சி செய்கின்ற வேலையை நாம்
செய்யும் நிலமை மாற வேண்டும். அடித்தட்டு மக்களின் அடிப்படைபிரச்சனைகளை
அவர்கள் திருப்திபடும் வகையிலாவது நிவர்த்தி செய்து வைக்ககூடிய சபையாக
காணப்பட வேண்டும். விட்ட பிழைகளை நிவர்த்தி செய்ய கூடியதாக இருக்க
வேண்டும்.
பதில் 01 : மாகாண சபை முறமையூடாகவே தமிழ் மக்களது பிரச்சனைகளை தீர்த்து வைக்கலாம் என்பதை ஆரம்ப காலம் முதலே சொல்லி வந்திருந்தோம்.
எமது கட்சி வடக்கு மாகாண சபையை
கைப்பற்றியிருந்தால் இதனை வளமான மாகாணமாக்கி பாலும் தேனும் ஓட
வைத்திருப்போம். இது காலம் கடந்துவிட்டது, இதில் ஒன்றும் இல்லை என்றவர்கள்
பின்னர் இச் சபையை நாம் கைப்பற்றி விடப் போகின்றோம் என்பதற்காக மக்களை
உசுப்பேற்றி வெற்றி பெற்றார்கள்.
பின்னர் இதற்கு அதிகாரம் இல்லை
என்றார்கள். பின்னர் தாங்களே அதிகார துஸ்பிரயோகம் நடந்த்து என்றார்கள்.
அரசாங்கம் நிதி தரவில்லை என்றார்கள். பின்னர் நிதி மோசடி நடந்த்து
என்றார்கள். ஜந்து வருடத்தை வீண்டித்து விட்டோம் என்கிறார்கள். செய்ய
கூடியவற்றை செய்யவில்லை என்கிறார்கள். எல்லாவற்றையும் இவர்களே
கூறுகின்றார்கள். இவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறையுமில்லை, அதனை
செய்வதற்கு ஆற்றலுமில்லை.
பதில் 02 : இம் மாகாண சபை முறமையில்
நம்பிக்கையுள்ள, அதனை கொண்டு நடாத்த கூடிய ஆற்றலுள்ள, அக்கறையுள்ளவர்களிடம்
இச் சபை கிடைத்தாலே அதன் பயன் மக்களை முழுமையாக சென்றடையும்.
பதில் 01 : வடக்கு மாகாண சபையை என்ன நோக்கத்திற்காக நாம் பொறுப்பேற்றமோ அது நிறைவேற்றப்படவில்லை. அதிகார பகிர்வை கோரியது நாம்.
ஆனால் ஏனைய மாகாண சபைகள் செய்தவற்றை விட
குறைவாகவே வடக்கு மாகாண சபை செயற்பட்டிருக்கின்றது. மாகாண சபையூடாக
அழிவிலிருந்த மக்களை மீள கட்டியெழுப்பலாம் என்பதற்காகவே அதனை
பொறுப்பேற்றோம். ஆனால் அது நடைபெறவே இல்லை.
சர்வதேச ரீதியிலும், அரசியல் ரீதியிலும்,
தேசிய ரீதியிலும் தீர்மானங்களை நிறைவேற்றுவதிலேயே கூடுதல் கவனம்
செலுத்தப்பட்டுள்ளது. அதிகாரங்களை உபயோகிக்க கூடிய நியதிச்சட்டங்களை
உருவாக்கவில்லை.
கொடுத்த கடமை சரியாக நிறைவேற்றப்படவில்லை.
இதற்கு நாமும் பொறுப்பு கூற வேண்டியவர்களாக இருக்கின்றோம். முதலமைச்சரது
தவறான செயற்பாடுகளால் பல குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.
பதில் 02 : இது வரை விட்ட தவறுகளை
திருத்திகொள்ள வேண்டும். அதிகார வரம்புகளை சரியாக உணர்ந்து செயற்பட
வேண்டும். இருக்கின்ற அதிகாரங்களை சரியாக உபயோகிக்க கூடிய நியதிச்
சட்டங்களை உருவாக்க வேண்டும்.
தீர்மானங்களை மாத்திரம் நிறைவேற்றுகின்ற
சபையாக இருக்காமல் அடிப்படையில் செய்யப்பட வேண்டிய பல விடயங்களை செய்ய
கூடிய சபை உருவாக வேண்டும்.
தற்போதிருந்த வடக்கு மாகாண சபையின் போக்கை
மாற்றி மக்களுக்கு சேவை செய்ய கூடிய சபையாக உருவாக வேண்டும். இதேவேளை இம்
மாகாண சபையானது இதுவரை 134 அமர்வுகளை நடாத்தியுள்ளதுடன் இதன்போது 442
பிரேரணைகளையும் நிறைவேற்றியுள்ளது.
இவற்றுள் 05 பிரேரணைகள் இலங்கையில்
இடம்பெற்ற போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் இனப் பிரச்சனை
தொடர்பாகவும் நிறைவேற்றப்பட்டவையாகும். இவை தவிர இது வரையில் 32 நியதிச்
சட்டங்களை மாத்திரமே உருவாக்கியுமுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக