புதன், 24 அக்டோபர், 2018

சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் நடிகைகள் ஜெயஸ்ரீ .சுதாசந்திரன் மட்டுமல்ல ... வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள்


Image may contain: one or more people and people standing A Sivakumar : எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான உண்மைகள்
Image may contain: 2 people, people smiling, people standing உண்மை 1: நடிகைகள் ஜெயஸ்ரீ, சுதாசந்திரன் ஆகிய இருவரும் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் குருசாமி நடிகர் நம்பியார் ; உடன் சேர்ந்து, பெரும் அய்யப்ப பக்தர் ஆன கே.சங்கர் அவர்கள் இயக்கத்தில் நம்பினோர் கெடுவதில்லை என்ற படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிக்காக 1986ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 முதல் 13 வரை சபரிமலை சென்று வருகின்றனர். உடன் நடிகை மனோரமா வேறு. உண்மை 2:
இளவயசுப் பொண்ணுங்க பதினெட்டாம் படி ஏறக் கூடாது..ஆனால் பின்
வாசல் வழியாக சன்னதிக்கு வந்து வழிபடலாம் என்று வசனம் இருக்கிறது. பதினெட்டாம் படி அருகே நின்று கொண்டு இந்த வசனத்தை ஜெயஶ்ரீயிடம் சொல்பவர் யார் தெரியுமா?
நம்ம குருசாமி எம்.என்.நம்பியார் தான்
உண்மை 3:
இந்த படப்பிடிப்பு நடைபெற சபரிமலை தேவசம் போர்டு ரூ.7500/- படப்பிடிப்பு கட்டணமாக பெற்று இருக்கிறது.
உண்மை 4:
இந்த நிகழ்வை எதிர்த்து தான் கேரளாவில் வழக்கு தொடரப்பட்டு அது கேரளா உயர்நீதிமன்றம் வரை சென்று பெண்கள் உள்நுழைய தடை என்று முடிகிறது.
உண்மை 5:
தேவசம் போர்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் 1991 வரை ஒவ்வொரு மாதமும் மலையாள பெண்கள் சோறுண்ணு என்ற பெயரில் தங்களின் குழந்தைகளுக்கு முதல் முறை சோறுட்டும் நிகழ்வை நடை திறந்து வைக்கப்படும் 5 நாட்களில் செய்து வந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது.

பார்க்க...பக்கம் 94, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
இது போக என் சோறுண்ணு நிகழ்வு சபரிமலையில் தான் நடந்தது என்ற TKA Nair என்பவரின் பேட்டி...
https://timesofindia.indiatimes.com/articlesh…/66003421.cms…
உண்மை 6:
இந்த வழக்கில் பெண்கள் சார்பாக வாதாடிய Ravi Prakash Gupta, தீர்ப்பு அளித்த தலைமை நீதிபதி Dipak Mishra அவருடன் சேர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி Ajay Manikrao Khanwilkar ஆகிய மூவருமே இந்துக்கள் தான்.
இந்த மூவர் மட்டும் அல்ல, பெண்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள்
1. Mr. Sushendra Kumar Chauhan,adv.
2. Ms. Suman Gupta,Adv.
3. Ms. Prerna Kumari,Adv.
4. Mr. P.K. Shastri,Adv.
5. Dr. Laxmi Shashtri,Adv.
6. Mr. Rajendra Kumar Shastri,Adv.
சபரிமலை தேவசம் போர்டு சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள்
7. Mr. K.K. Venugopal, Sr.Adv.
8. Mr. Krishnan Venugopal,Adv.
9. Mr. S. Udaya Kumar Sagar,Adv.
10. Ms. Bina Madhavan,Adv.
கேரள மாநில அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள்
11. Mr. Rajinder Sachar, Sr.adv.
12. Mr. R. Sathish,Adv.
இவர்கள் 12 மட்டுமல்லாது
13. Mr. C.A. Sundaram, Sr.Adv.
14. Mr. K.V. Mohan,Adv.
15. Mr. K.V. Balakrishnan,adv.
16. Mr. Harish V. Shankar,Adv.
17. Ms. Rohini,Adv.
மொத்தம் 17 இந்துக்கள் தான் இந்த வழக்கை இருதரப்பு சார்பாகவும் நடத்தியவர்கள். அனைவரும் இந்துக்கள் தான்.
உண்மை 7:
பின்னர் ஏன் சங்கி மங்கிகள் இதை முஸ்லிம்கள் தொடர்ந்த வழக்கு என்று திரிகிறார்கள்?
டெல்லி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்த Indian Young Lawyers Association என்பதின் தலைவராக இருக்கும் Naushad Ahmed Khan ஒரு முஸ்லீம்.
Chennai Bar Association, The Bar Council of India, The Bar Association of India என பல கூட்டமைப்புகள் இங்கே இருக்கின்றன. அதில் ஒன்று தான் Indian Young Lawyers Association. அதில் யாருடைய கெட்ட நேரமோ இந்த தீர்ப்பு வரும் வேளையில் ஒரு முஸ்லீம் தலைவராக இருக்கிறார். அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சங்கி மங்கிகள் கல் எறிகிறார்கள்.
உண்மை 8:
இது என்ன Indian Young Lawyers Association மட்டும் போட்ட வழக்கா?
இல்லை.
Bhakti Pasrija Sethi,General Secretary of the Indian Young Lawyers Association,
Laxmi Shastri,
Prerna Kumari
Alka Sharma,
Sudha Pal
என வரிசைப்படுத்தப்படும் Petitioners அனைவருமே இந்துக்கள் தான்.
அதிலும் குறிப்பாக இந்த Prerna Kumari RSS இயக்கத்தின் மகளிர் கிளையான Rashtra Sevika Samiti உறுப்பினர்.
https://barandbench.com/sabarimala-case-petitioners-bhakti…/
உண்மை 9:
இந்த வழக்கு மொத்தம் 5 நீதிபதிகள் கொண்ட குழுவின் விசாரணைக்கு உட்பட்டது. தீர்ப்பில் பெண்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த Dipak Mishra, R.Nariman, DY.Chandrachud & AM.Khanwilkar நால்வரும் முஸ்லிம்கள் அல்ல.
பெண்கள் நுழையக்கூடாது என்று தீர்ப்பளித்த பெண் நீதிபதி Indu Malhotra முஸ்லீம் அல்ல.
4:1 என்ற அடிப்படையில் சபரிமலையில் பெண்கள் நுழைவது அனுமதிக்கப்பட்டது.
உண்மை 10:
இந்த தீர்ப்பை சங்கி மங்கிகள் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்தார்களா?
இல்லை.
வரவேற்கவே செய்தார்கள்.
Maneka Gandhi
https://www.telegraphindia.com/…/maneka-welcome…/cid/1670507
RSS
https://www.news18.com/…/rss-backs-womens-entry-in-temples-…
https://economictimes.indiatimes.com/…/article…/66165404.cms
https://www.thequint.com/…/sabarimala-temple-verdict-suprem…
உண்மை 11:
எங்கே குறுக்கே விழுந்து குழப்ப ஆரம்பித்தார்கள்?
https://www.news18.com/…/sanghs-u-turn-on-sabarimala-may-he…
உண்மை 12:
வேற்று மதத்தவர் சபரிமலையில் நுழையக்கூடாதா?
தாராளமாக நுழையலாம். சபரிமலை இந்து ஆகமத்துக்கு உட்பட்ட ஒரு கோயில் அல்ல. ஐயப்பனும் வேத, புராண கடவுள் அல்ல. நம்ம ஊர் கருப்புசாமி, ஐய்யனாரு, சுடலைமாடன் போன்ற ஒரு லோக்கல் கடவுள் தான்.
மேலும் இந்த வழக்கின் தீர்ப்பில் பெண்களை கோயிலுக்கு வரக்கூடாது என்ற எந்த ஆகம விதியும் இல்லை என சீராய்ந்த பிறகு தான் தீர்ப்பே பெண்களுக்கு ஆதரவாக வழங்கப்பட்டது.
அறிவராசனம் பாடிய ஜேசுதாஸ் கிறிஸ்துவர் தான். சபரிமலை போவோர் அனைவரும் அங்கிருக்கும் வாவர் சந்நிதி என்ற ஒரு இஸ்லாமிய சந்நிதியில் உணவு உட்கொள்வது காலம் காலமாக நடக்கிறது.
அதனால் கோவிலுக்கு போக வேண்டும் என்று Rehana Fathima மட்டும் அல்ல எந்த மதத்தை சேர்ந்த ஆணும் பெண்ணும் விரும்பினாலும் தாராளமாக போகலாம். கோவிலுக்கு உரிய மரியாதையை சீர்குலைக்காமல் தாராளமாக ஐயப்பனை தரிசிக்கலாம்.
அப்படி இல்லை என்றால் அவரை ஒரு கிரிமினலாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, அவரை மதத்தை அடையாளமாக கொண்டு கலவரத்தை தூண்டக்கூடாது.
உண்மை 13:
தற்போதைய நிலையில் Rehana Fathima ஒரு முஸ்லீம் அல்ல. 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய ரெஹானா, ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் Manoj K Sreedhar என்ற ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறார். மதம் மாறிய பின் பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை என சொல்லியும் இருக்கிறார்.
கேரளாவை உலுக்கிய ஹாதியா ஏன் முஸ்லிம் பையனை திருமணம் செய்தார் என இவர் அழுதும் இருக்கிறார்.
இது போக சுப்ரீம் கோர்ட்டின் சபரிமலை தீர்ப்புக்கு பிறகு, ரெஹானா பாத்திமாவும், கேரள பாஜக தலைவர் கே. சுரேந்திரனும் மங்களாபுரத்தில் பலமுறை சந்தித்து பேசிய விபரத்தை கேரள பத்திரிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளது.
https://malayalam.oneindia.com/…/articlecontent-pf272423-21…
எல்லா மதத்திலும் கிரிமினல்கள் உண்டு.
எல்லா இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் கிரிமினல்கள் அல்ல.
எல்லா இந்துக்களும் சத்தியவான் சாவித்திரி அல்ல.
உண்மை 14:
இந்த உண்மைகளை நான் ஒன்றும் CBI, FBI, Mozzat போன்ற நிறுவனங்களின் துணையோடு கண்டுபிடிக்கவில்லை. A Simple Google Search throws all the details you want.
இதையெல்லாம் செய்ய தெரியாதவர்கள் யாரும் இங்கில்லை.
ஒன்று செய்ய வேண்டிய அவசியம் இல்லாதவர்கள்
இரண்டு செய்ய விருப்பமில்லாதவர்கள்
செய்ய வேண்டிய அவசியம் இல்லாதவர்களை பற்றி கவலையே இல்லை. அவர்கள் எதற்கும் யார் சார்பாகவும் நிலையெடுக்கவே போவதில்லை.
செய்ய விருப்பமில்லாதவர்கள் தான் சிக்கலே. அவர்கள் செய்யாமல் இருப்பது கூட தவறில்லை. ஆனால் தங்களுக்கு வசதியான பொய்களை மட்டும் உண்மை போல திரித்து தவறான தகவல்களை பரப்பிக்கொண்டிருப்பதால் மட்டுமே இவ்வளவு தேடல்களை செய்யவேண்டியதாகி உள்ளது.
உண்மை 15:
இது தேர்தல் ஆண்டு.
நாங்கள் இதை செய்தோம் என்று மக்களிடம் சொல்லி ஓட்டு கேட்பதற்கு ஆர்.எஸ்.எஸ் & பாஜகவிடம் ஒரே ஒரு சாதனை கூட இல்லை.
மேலும் மேலும் மாற்று மதத்தவர் மீது வெறுப்பை ஊட்டும் செய்திகள் வரிசைக் கட்டி வரும். அப்படி வெறுப்பை வளர்த்து தான் இந்துக்களின் ஓட்டை வாங்க முயல்வார்கள்

கருத்துகள் இல்லை: