
சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ மூலம் தெரிய வந்தவர். சிறுகதை ஆசிரியராக “நீர்மை” என்ற தொகுப்பை எழுதியுள்ளார். பின் நாடகம் மீது இவர் கவனம் திசை திரும்பியது. இவர் நடத்திவரும் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்று திரையுலகில் இயங்கிவரும் கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: கலைராணி, பசுபதி, ஜார்ஜ், ஜெயராவ், ஜெயக்குமார், கருணாபிரசாத், விஜய் சேதுபதி, விமல், விதார்த், தேவி, மீனாட்சி, குரு சோமசுந்தரம், ஆனந்த் சாமி, குபேரன், சஞ்சீவி, கவின் ஜெ.பாபு என்று பலர்.
மேலும் இவர் 2000 ஆண்டின் சங்கீத நாடக அகாதமியின் விருது பெற்றிருக்கிறார். நீர்மை உட்பட 5 நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய ‘ந.முத்துசாமி கட்டுரைகள்‘எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள் (இசை, நடனம், ஓவியம், சிற்பம்) எனும் பிரிவில் பரிசு பெற்றிருக்கிறது. 2012 ஆம் ஆண்டில் இவரது கலைச்சேவையை பாராட்டும் வண்ணம் இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி பெருமை படுத்தியுள்ளது.
நாற்காலிக்காரர், சுவரொட்டிகள், உந்திச்சுழி, கட்டியக்காரன், நற்றுணையப்பன், இங்கிலாந்து தெனாலி, பிரகலாத சரிதம், சந்திர ஹரி, படுகளம் என்று முத்துசாமியின் நாடகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றன.
இவரது மறைவிற்கு கலையுலகைச் சார்ந்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Devi Somasundaram : தஞ்சை மாவட்டத்தின் புஞ்சை ( செம்பனார் கோவில்
அருகில் ) கிராமத்தை சேர்ந்தவர் .நா.முத்துசாமி..கூத்துபட்டறை என்ற நாடக வடிவத்தை வெகு மக்களிடம் கொண்டு சென்றவர் ..நிறைய சினிமா நடிகர்களை ( விஜய் சேதுபதி , விமல் இவர் பட்டறையில் உருவானவர்கள் ) தன் கூத்து பட்டறையில் உருவாக்கியவர் .பத்ம ஸ்ரீ பட்டம் பெற்றவர்..82 வயதாகும் தோழர் முத்துசாமி காலமானார் .ஆழ்ந்த இரங்கல்கள் .

மிகையுணர்ச்சியிலிருந்து நடிப்பை யதார்த்திற்கு மாற்றியதில் இவரின் பங்கு குறிப்பிடதக்கது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக