செவ்வாய், 23 அக்டோபர், 2018

ரஜினிகாந்த் : தமிழக அரசியலில் மாற்றம் கொண்டுவரத்தான் அரசியலுக்கு வருகிறேன்

NDTV": தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்கவே
அரசியலுக்கு வருகிறேன்: ரஜினிகாந்த்" தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்கவே அரசியலுக்கு வருகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்கள்   மன்றத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் என் அனுமதி இல்லாமல் நடந்ததாக சிலர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவது என் கவனத்திற்கு வந்தது. அதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்கவே அரசியலுக்கு வருகிறேன்: ரஜினிகாந்த்நம் மன்ற உறுப்பினர்களின் நியமனம், மாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்துமே என் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டு என் ஒப்புதலுடன் தான் அறிவிக்கப்படுகின்றன.
கடந்த வருடம் மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின் போதே, “நான் அரசியலுக்கு வந்தால் அதை வைத்துப் பதவி வாங்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்க மாட்டேன். அப்படிப்பட்டவர்கள் இப்போதே விலகி விடுங்கள்” என்று நான் தெளிவாகக் கூறியிருந்தேன்.
நான் சொன்னது வெறும் பேச்சுக்காக இல்லை. தமிழ்நாட்டில் ஒரு புது அரசியலை அறிமுகப்படுத்தி அதன் மூலமாக ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத் தான் நாம் அரசியலுக்கு வருகிறோம்.

அப்படி இல்லாமல், மற்றவர்களைப் போல் அரசியல் செய்வதற்கு நான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்? நாம் எதற்காக, எந்த எண்ணத்துடன் அரசியலுக்கு வருகிறோம் என்பது மிக மிக முக்கியம்.
வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது என்று தான் அர்த்தம். மக்களுடைய ஆதரவு இல்லாமல் அரசியலில் நாம் நினைத்ததைச் சாதிக்க முடியாது.

COMMENT
30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபவதற்கோ முழு தகுதி ஆகிவிட முடியாது. மன்றத்திற்காக உண்மையாக உழைக்கும் எல்லோருடைய செயல்பாடுகளையும் நான் நன்கு அறிவேன். அந்த உழைப்பு வீண் போகாது. அதற்கான பலனை இறைவன் நமக்கும், நம் நாட்டு மக்களுக்கும் தருவான் என்று நான் முழுமையாக நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: