புதுடெல்லி : சிபிஐ தலைமையகம், சிபிஐ
ரெய்டு, அலோக் வர்மா, ராகேஷ்
அஸ்தானா, நாகேஸ்வர ராவ், சிபிஐ , மத்திய அரசு , புதுடில்லி : சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.
இதனையடுத்து புதிய இயக்குனராக நாகேஸ்வர ராவை தற்காலிகமாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் ஆலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா இடையேயான பனிப்போர் தொடர்வதால் அவர்களை கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் டில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகம் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
ஆலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா ஆதரவு ஊழியர்கள் மற்றும் வெளியாட்கள் அலுவலகத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் சிபிஐ தலைமை அலுவலகத்தின் 11 வது தளத்தில் உள்ள அலோக் வர்மாவின் அலுவல அறைகளில் நாகேஸ்வர ராவ் தலைமையிலான அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, தாங்கள் விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டதற்கு அதிராக அலோக் மற்றும் ராகேஷ் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக