இந்த நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் குற்றாலம் ரிசார்ட் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
நெல்லை மாவட்டம் பழையகுற்றாலம் சாலையில் அமைந்துள்ள இசக்கி ஹைவியூ ரிசார்ட்டில்தான் எம்.எல்.ஏக்கள் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த ரிசார்ட் முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போது அமமுக மாநில அம்மா பேரவை செயலாளர் பொறுப்பில் உள்ளவருமான இசக்கி சுப்பையாவுக்குக் சொந்தமானது. மேலும் இவரது மகனுக்குத்தான் தமிழ்க காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மகளை திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.<>குடில்கள், குளிர்சாதன அறைகள், சூட் அறைகள் என 30 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ள இந்த ரிசார்ட்டில் தற்போது வெற்றிவேல் தவிர 17 எம்எல்ஏக்கள் தங்கியிருப்பதாகவும் விரைவில் தினகரனும் வெற்றிவேலுவும் இந்த ரிசார்ட்டுக்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக