tamil.thehindu.com :
தற்போது திமுக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து சிபிஐ மூலம் ஏதாவது
செய்யவேண்டும் என்கிற நிலையை ஏற்படுத்துகிறார்கள் என மக்களவை துணை
சபாநாயகர் தம்பிதுரை பேட்டி அளித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “அகில இந்திய அளவில் நடக்கக்கூடிய சிபிஐயின் நிலைமை இப்படி மாறிக்கொண்டிருக்கிறது. முன்னர் காங்கிரஸ் ஆட்சியில் என்ன சொன்னார்கள், சிபிஐ என்பது காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (Congress Bureau of Investigation) என்றார்கள். இப்ப என்ன சொல்கிறார்கள் சென்டர் பார் பிஜேபி இன்வெஸ்டிகேஷன் (Centre for Bjp Investication) என்று ஆகிவிட்டது.
சிபிஐ எந்த அளவுக்கு திமுகவுக்கு ஆதரவாக உள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். தற்போது எங்கள் அமைச்சர்கள் மீது சிபிஐ வழக்கு போட்டு முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும், அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யவேண்டும், டிஜிபி ராஜினாமா செய்யவேண்டும் என்று சொல்வது நடக்கிறது. சிபிஐயின் அவல நிலையை திமுகவினர் புரிந்துகொள்ள வேண்டும். திமுகவுக்கு அமித்ஷா ரிங் மாஸ்டராக உள்ளார்
சிபிஐ-யை வைத்துக்கொண்டு அதிமுகவை அன்றைய காங்கிரஸ் அரசும் பழிவாங்கியது, தற்போது திமுக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஏதாவது செய்யவேண்டும் என்கிற நிலையை ஏற்படுத்துகிறார்கள். சிபிஐ மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது, அதன் இயக்குநர்களே மாற்றப்பட்டு வருவதால், சிபிஐ அமைப்பை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தமிழகத்தில் தேசியக் கட்சிகள் காலூன்ற முடியாது. இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என தேசியக் கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள், வட மாநிலத்தைச் சேர்ந்த 10 லட்சம் பேர் தமிழகத்தில் வேலை செய்கின்றனர்.”
இவ்வாறு தம்பிதுரை பேசினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக