நக்கீரன்: தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகினர்மீது
பாலியல் புகார்கள் கூறிவந்த
ஸ்ரீரெட்டியிடம் ‘மீ டூ’ பற்றியும், அவரது புகார் மீதான நிலை குறித்தும் கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில்,
பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி சினிமாவில் இருக்கும் பெண்களே தவறாக பேசுகிறார்களா?</ சிலர் இதை வியாபாரமாக செய்கிறார்கள், நான் வெளிப்படையாகக் கூறுகிறேன். விபச்சாரமாக செய்கிறார்கள். நான் அனைவரையும் கூறவில்லை, ஒரு சிலரை மட்டுமே குறிப்பிடுகிறேன். சிலர் இப்போதெல்லாம் யாரையும் அழைப்பதில்லை. நாங்கள் அந்த பயத்தை உண்டாக்கியுள்ளோம். இப்போதெல்லாம் யாரும் யாருக்கும் ஃபோன்கூட செய்வதில்லை. அதை ரெக்கார்ட் செய்துவிடுவார்கள் என்ற பயம் அவர்களுக்கு உண்டாகியுள்ளது. இதனாலும்கூட சிலர் மீ டூ விற்கு எதிராக பேசுகிறார்கள்.
மீடூவில் பாதிக்கப்பட்ட பெண்கள் சொல்வதெல்லாம் உண்மை என நினைக்கிறீர்களா?
பத்து வருடங்களுக்கோ, பதினைந்து வருடங்களுக்கோ முன்பு நடந்திருந்தாலும் அதுவெல்லாம் பொருட்டே கிடையாது. வலி வலிதான் அது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி. எனது வலியை தீர்மானிக்க நீங்கள் ஆளில்லை. யாராலும் எனது வலியை உணரமுடியாது. இதுதான் உண்மை.
ஸ்ரீரெட்டியிடம் ‘மீ டூ’ பற்றியும், அவரது புகார் மீதான நிலை குறித்தும் கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில்,
பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி சினிமாவில் இருக்கும் பெண்களே தவறாக பேசுகிறார்களா?</ சிலர் இதை வியாபாரமாக செய்கிறார்கள், நான் வெளிப்படையாகக் கூறுகிறேன். விபச்சாரமாக செய்கிறார்கள். நான் அனைவரையும் கூறவில்லை, ஒரு சிலரை மட்டுமே குறிப்பிடுகிறேன். சிலர் இப்போதெல்லாம் யாரையும் அழைப்பதில்லை. நாங்கள் அந்த பயத்தை உண்டாக்கியுள்ளோம். இப்போதெல்லாம் யாரும் யாருக்கும் ஃபோன்கூட செய்வதில்லை. அதை ரெக்கார்ட் செய்துவிடுவார்கள் என்ற பயம் அவர்களுக்கு உண்டாகியுள்ளது. இதனாலும்கூட சிலர் மீ டூ விற்கு எதிராக பேசுகிறார்கள்.
மீடூவில் பாதிக்கப்பட்ட பெண்கள் சொல்வதெல்லாம் உண்மை என நினைக்கிறீர்களா?
பத்து வருடங்களுக்கோ, பதினைந்து வருடங்களுக்கோ முன்பு நடந்திருந்தாலும் அதுவெல்லாம் பொருட்டே கிடையாது. வலி வலிதான் அது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி. எனது வலியை தீர்மானிக்க நீங்கள் ஆளில்லை. யாராலும் எனது வலியை உணரமுடியாது. இதுதான் உண்மை.
மீ டூவில் பாதிக்கப்பட்ட பெண்களை ஊடகங்கள் நடத்தும் விதம் குறித்து நீங்கள் நினைப்பது என்ன?
ஊடகங்கள் கொஞ்சம் கவனமாகத்தான்
இருக்கவேண்டும். நமக்கு தெரிந்திருக்கவேண்டும், பாதிக்கப்பட்டவர் யார்,
அரசியல்வாதி யார், நடிகர் யார், அது விருப்பத்தின்பேரில் நடந்ததா அல்லது
திணிக்கப்பட்டதே என்பதையெல்லாம் நாம் சரியான வழியில் அணுகவேண்டும். அதை
சரியாக கையாளத் தெரியவில்லையென்றால் நீங்கள் பத்திரிகையாளர்களே இல்லை.
நீங்கள் உங்கள் பொறுப்பை மிஸ் யூஸ் செய்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள்
அதற்கு தகுதியே இல்லாதவர், நீங்கள் உங்கள் பணியைவிட்டு
விலகிக்கொள்ளுங்கள்.
ஏன் பாதிக்கப்பட்ட பெண்கள் எல்லாருமே கோர்ட்டுக்கு போகாம சமூக ஊடகங்களிலேயே இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்?
நானே நிறைய வழக்குகளை காவல் துறையில் பதிவு
செய்துள்ளேன். அதற்கெல்லாம் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். பதில் கூறுங்கள்
பார்ப்போம். அந்தக்கொடுமை நிகழ்ந்து நீண்ட காலங்கள் ஆனால் யார் வழக்கை
ஏற்றுக்கொள்வார்கள். காவல்துறை, நீதிமன்றம், அரசாங்கள் பாதிக்கப்பட்டவரின்
மீதி அக்கறை எடுத்து வழக்கை துரிதமாக நடத்தவேண்டும். அப்படி நடத்தினால்தான்
சரியான தீர்ப்பு கிடைக்கும்.
நீங்கள் கூறும் பாலியல் புகார்கள் மீ டூ வில் அடங்கும் என நினைக்கிறீர்களா?
கடந்த ஒரு மாதமாக யாரும் முன்வரவில்லை.
எங்கள் சங்கமும்கூட அடையாள அட்டை தர மறுத்தது. நீங்களெல்லாம் பெரிய
மனிதர்களை காப்பாற்றுகிறீர்கள். ஏன் இப்படி செய்கிறீர்கள். என்னைப்போன்று
பல பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவையெல்லாம் மீடூவில் வராதா. நான்
எனக்காக மட்டும் இதை செய்யவில்லை, அனைத்து பெண்களுக்காகவும்தான் செய்தேன்.
எனக்கு எந்த விருதுகளும், பரிசுகளும் வேண்டாம், எனக்கு தேவை நியாயமான
தீர்ப்பு மட்டுமே அதுவே எங்களுக்கு போதும். நான் போராடியபோது என்னை
தெலுங்கு திரையுலகம் ஒதுக்கியது. இது சரியா? உங்களுக்கு தெரியாது அவர்கள்
எனக்கு பணம், படவாய்ப்பு, என அனைத்தையும் தருவதாக கூறினார்கள். நான் அதை
வாங்கிவிட்டு அமைதியாக இருந்திருக்கலாம். இந்நேரம் நான் தெலுங்குவில்
நடிகையாகியிருப்பேன். ஆனால் நான் அதையெல்லாம் செய்யவில்லை. ஏனென்றால் நான்
இங்கு பெரிய புரட்சியே செய்துகொண்டிருக்கிறேன். மீடூ போன்றவைகளின்
வாயிலாக.
தெலுங்கு, தமிழ் திரையுலகினர் மீது பாலியல் புகார் அளித்திருந்தீர்கள் அந்த புகார்களின் நிலை என்ன? உங்களுக்கான நீதி கிடைத்ததா?
நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,
இந்த காலகட்டத்தில் வாழ்வதை நினைத்து. நான் பாலியல் புகார்களை கூற
தொடங்கும்போது எனக்கு ஆதரவளிக்க யாரும் முன்வரவில்லை, ஊடகங்களைத் தவிர.
ஊடகங்கள்தான் எனக்கு தைரியமளித்தது, ஊக்கமளித்தது. குறிப்பாக நக்கீரன்
மக்களிடையே என் பிரச்சனைகளை கொண்டுசேர்த்தது. ஆனால் வட இந்தியாவைக்
காட்டிலும், தென்னிந்தியாவில் இந்தப் பிரச்சனைகளை பற்றி பேசுவது
குறைவுதான். நாம் அடுத்த தலைமுறையைப்பற்றி நினைக்க வேண்டும். 5, 10
வருடங்களுக்கு பிறகு, என் மகள் பள்ளிக்கு செல்லவேண்டும். அங்கு அவள்
ஆசிரியர் உட்பட பல ஆண்களை எதிர்கொள்ள வேண்டும். நான் ஒரு பாதுகாப்பான
சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறேன். இதைப்பற்றி கூச்சப்பட்டாலோ,
அச்சப்பட்டாலோ எப்படி பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவது. நான்
எல்லாரையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் வெளிப்படையாக இதைப்பற்றி
பேசவேண்டும்.
நீங்க பாலியல் புகார்களை
முன்வைக்கும்போது நிறையபேர் உங்களை தவறாக விமர்சித்தார்கள் அப்போது சிலர்
மோசமான வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தினார்கள். அவர்களுக்கு நீங்கள் கூற
நினைப்பது?
முதலில் நான் இப்படியான சமூகத்தில் வாழ்வதை
நினைத்து வெட்கப்படுகிறேன். நீங்கள் என்னை கேவலப்படுத்துகிறீர்கள். ஆனால்
எனது பக்கத்திலிருந்து பார்க்கும்போது இந்த உலகம்தான் எனக்கு கேவலமாக
தெரிகிறது. சில நல்ல மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன அதை மறுக்கமுடியாது.
தனுஸ்ரீ தத்தா எவ்வளவு ஆதரவைப் பெற்றுள்ளார் பாலிவுட்டில், ஆண் பெண்
பேதமில்லாமல் அனைவரும் அவரை ஆதரிக்கின்றனர். ஆனால் ஏன் தென்னிந்தியா இப்படி
செய்வதில்லை. குறிப்பாக பாரதிராஜா உட்பட சிலர் மிக தவறாக பேசுகிறார்கள்.
சிலர் ஸ்ரீரெட்டி நீங்கள் இப்படி பேசினால் உங்களுக்கு படவாய்ப்பு
கிடைக்காது என ப்ளாக்மெயில் செய்கிறார்கள். உண்மையைக்கூறினால் ப்ளாக்மெயில்
செய்வீர்களா, நடிகர் சங்க அடையாள அட்டை தரமாட்டீர்களா, என்னை
நடிக்கவிடமாட்டீர்களா? என்ன தவறு நான் செய்தேன். தவறுகளையெல்லாம் நீங்கள்
செய்துவிட்டு, நாங்கள் அதை வெளிப்படுத்தினால் அது தவறு என்கிறீர்கள்.
பாரதிராஜா, குட்டி பத்மினி போன்றவர்கள் அவர்களையும் ஆதரிக்கிறார்கள்,
எங்களையும் ஆதரிக்கிறார்கள். இது சரியல்ல.
யார் இந்த வாராகி. அவர் சொல்கிறார் நான் 3
கோடியில் வீடு வாங்கினேன் என்று. உங்களுக்கு தெரியுமா, ஆதாரம் இருந்தால்
காட்டுங்கள். ஏன் கேவலமாக கேமராமுன் பொய் சொல்கிறீர்கள். உங்களுக்கு
பப்ளிசிட்டி தேவைப்படுகிறது அது அனைவருக்கும் தெரியும். என்னிடம் ஆதாரம்
இருக்கிறது, உங்களிடம் ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். நீ யார் என்னை
என்னைப்பற்றி பேச. கமிஷனர் ஆஃபிசில் கம்ப்ளெய்ண்ட் கொடுத்துள்ளேன்.
உண்மையில் செருப்படி வாங்க தகுதியானவர் இவர்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக