மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி நியமனம் ரத்து: மதுரை ஐகோர்ட் தீர்ப்புமதுரை
காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் சந்திரன் பாபு, கல்லூரி
முதல்வர் இஸ்மாயில், பேராசிரியர் ஜெயராஜ் உள்பட 4 பேர் மதுரை ஐகோர்ட்டில்
ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:–பல்கலைக்கழக
மானிய குழு விதிப்படி துணைவேந்தர் பதவி வகிக்க 10 ஆண்டுகள் பேராசிரியராக
பணியாற்றி இருக்க வேண்டும். அனுபவம் இருக்க வேண்டும். ஆனால் கல்யாணி
மதிவாணன் இணை பேராசிரியையாக பணியாற்றி உள்ளார். இவர் நாவலர் நெடுஞ்செழியனின் உறவினர். விண்ணப்பித்த நூற்று சொச்சம் பேரில் இவர் ஒருவர்தான் தகுதி குறைந்தவர்
எனவே துணை வேந்தராக அவரை நியமித்தது நியாயமற்றது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனு இன்று (வியாழக்கிழமை) நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், வேலுமணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் லஜபதிராய், கிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.பின்பு நீதிபதிகள் கூறியதாவது: கல்யாணி மதிவாணன் துணைவேந்தராக நியமித்தது மானிய குழுவுக்கு எதிரானது. இணை பேராசிரியை பதவி, பேராசிரியர் பதவிக்கு இணையாகாது. எனவே அவரது பணி நியமனம் ரத்து செய்யப்படுகிறது என தீர்ப்பு கூறினர் nakkheeran.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக