நாம் பார்க்கும் எல்லா புகைப்படங்களும் நம் மனதில் நிற்பதில்லை.
புகைப்படத்தில் இருப்பவர்களைவிட, அந்தப் புகைப்படம் நமக்குள் ஏற்படுத்தும்
தாக்கமே அதனை மற்றவற்றில் இருந்து வித்தியாசப்படுத்துகிறது.
‘தி இந்து’ நாளிதழின் ஃபேஸ்புக் பக்கத்தில் நம் புகைப்படக் கலைஞர்கள்
எடுக்கும் சிறந்த புகைப்படங்களை பகிர்வது உண்டு. அப்படி பகிரப்படும்
புகைப்படங்கள் மக்கள் மனதை எந்த அளவுக்கு கவர்ந்திருக்கிறது என்பதை
உடனுக்குடன் வரும் பின்னூட்டங்கள், விருப்பங்கள் (லைக்) மூலமாகவும் அது
எத்தனை முறை பகிரப்பட்டுள்ளது என்பதிலும் தெரிந்துகொள்ளலாம்.
சமீபத்தில், அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு எதிராக கோவையில் நடந்த
கண்டனப் போராட்டத்தில், நமது புகைப்படக்காரர் ஜெ.மனோகரன் எடுத்த ஒரு
புகைப்படம், ‘தி இந்து’ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு சில மணி
நேரங்களிலேயே மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றதாக அமைந்தது.
விலைவாசி உயர்ந்த நேரத்தில் குறைந்த விலையில் தரமான உணவை ‘அம்மா உணவகம்’
மூலம் வழங்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அதேபோல குறைந்த கட்டணத்தில் கல்வி
வழங்க ‘அம்மா பள்ளிக்கூடம்’ தொடங்குவாரா என ஒரு சிறுவன் கேட்பதுபோல
இருந்தது அந்த படம்.
பதிவேற்றிய 3 மணி நேரத்தில், 7600 நேயர்கள் அதைப் பகிர்ந்தனர். 19,000 நேயர்கள் லைக் செய்தனர். தற்போது வரை மொத்தமாக 38,726 பேர் லைக் செய்துள்ளனர். 27,418 நேயர்கள் பகிர்ந்துள்ளனர். 1,324 பின்னூட்டங்களை அந்தப் புகைப்படம் கண்டுள்ளது. லைக், பின்னூட்டங்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக