காய்ச்சல், உடல் வலி போன்ற சாதாரண நோய்கள் முதல் ரத்தக் கொதிப்பு,
நீரிழிவு போன்ற பரவலாக காணப்படும் நோய் பாதிப்புகளை குணப்படுத்த
தேவைப்படும், முக்கியமான, 50 மருந்துகள் இலவசம் ,
புதுடில்லி : நாட்டு மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் மருத்துவ செலவினங்களை குறைக்கும் வகையிலும் நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட முக்கிய நோய்களுக்கான மருந்துகளை இலவசமாக வழங்க மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பொது மருத்துவ மனைகளில் இப்போது வழங்கி கொண்டு தான் இருக்கிறார்கள் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி கொண்டு இருப்பார்கள் .ஒரு சராசரி மனிதனின் வருமானத்தில் 20 வதிலிருந்து 30 சதம் வரை மருந்துக்கு செலவிட வேண்டியுள்ளது.இத்திட்டத்தை வரவேற்க வேண்டிய அதே நேரத்தில் மக்களுக்கு உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய தனியார் மருத்துவமனை செல்லும்போது உதாரணத்திற்கு செயற்கை இருதய வால்வு பொறுத்த வேண்டி வந்தால் ''அரசு கொடுக்கும் ரூ 30,000 க்கு சற்று தரம் குறைந்த வால்வு தான் பொருத்தமுடியும் இரண்டு வருட உத்திரவாதம் தான் அளிக்க முடியும்.அதே சமயத்தில் கூடுதலாக இன்னும் ரூ 30,000 செலுத்தினால் நல்ல வால்வு பொறுத்தமுடியும்'' என மக்களை பயமுறுத்தி திசை மாற்றி மேலும் பணத்தை பிடுங்கி விடுகிறார்கள்.இதனால் அரசு அளிக்கும் சலுகை சாதாரண தனி மனிதனுக்கு சென்று அடைவதில்லை.அரசு விழிப்புடன் செயல் பட வேண்டும்.
இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், ஹர்ஷவர்தன் கூறியதாவது:மக்களின் செலவினங்களை குறைக்கவும், அனைவரும் நோய் பாதிப்பிலிருந்து விடுபடவும், மத்திய அரசு புதிய திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, காய்ச்சல், உடல் வலி போன்ற சாதாரண நோய்கள் முதல் ரத்தக் கொதிப்பு, நீரிழிவு போன்ற பரவலாக காணப்படும் நோய் பாதிப்புகளை குணப்படுத்த தேவைப்படும், முக்கியமான, 50 மருந்துகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளோம்.இந்த மருந்துகளின் பட்டியலை தயாரிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நாடு முழுவதும் இத்திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும்.மக்கள் தங்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், 50 வகை மருந்துப் பொருட்களை இலவசமாக பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
ஹர்ஷவர்தன், 1993 - 98 களில் டில்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, இவர் அமல்படுத்திய மக்கள் நல மருத்துவ திட்டம், பெரும் வரவேற்பை பெற்றதுடன், உலக சுகாதார நிறுவனத்தின் பாராட்டையும் பெற்றது. 12 நாடுகளில் அத்திட்டத்தை செயல்படுத்த உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்தது. dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக