புதன், 25 ஜூன், 2014

மணவாழ்க்கையில் இருந்து மீண்டும் நடிக்கவரும் நடிகைகள் !


திருமணம் ஆகி சென்ற நடிகைகள் மீண்டும் நடிக்க வருகின்றனர். ‘கத்திகப்பல், ‘இன்பா படங்களில் நடித்த கல்யாணி, ரோஹித் என்பவரை மணந்துகொண்டு செட்டிலானார். திருமணம் ஆகி ஒரு வருடம்தான் ஆகப்போகிறது அதற்குள் கல்யாணிக்கு மீண்டும் நடிப்பு ஆசை வந்திருக்கிறது. விரைவில் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக கூறினார். ‘வரலாறு, ‘பைவ் ஸ்டார் படங்களில் நடித்த கனிகாவும் சில வருடங்களுக்கு முன் ஷியாம் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். ஒன்றிரண்டு வருடத்திலேயே மீண்டும் நடிக்க வந்துவிட்டார். தற்போது மலையாளத்தில் ‘கிரீன் ஆப்பிள்’ உள்ளிட்ட 3 படங்களில் நடித்து வருகிறார். ‘ஹவ் ஓல்டு ஆர் யூ என்ற மலையாள படம் மூலம் மஞ்சு வாரியர் ரீஎன்ட்ரி ஆகிவிட்டார்.இந்தபட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் நவ்யா நாயர்.
திரிஷ்யம் கன்னட ரீமேக்கில் பி.வாசு டைரக்ஷனில் நடிக்கிறார். வித்யாசாகர் என்பவரை மணந்து நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த மீனாவும் திரிஷ்யம் மலையாள படத்தில் நடித்தார். தற்போது ‘திரிஷ்யம்’ தெலுங்கு ரீமேக்கிலும் மீனா நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் விஜய்யை மணந்தார் அமலா பால். இவரது ரீ என்ட்ரியும் விரைவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. - tamilmurasu.org

கருத்துகள் இல்லை: