சென்னை ஐகோர்ட்டில் மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட
வழக்கு நீதிபதிகள் பால்வசந்தகுமார், சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில்
இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மக்கள் நல பணியாளர்கள் சார்பில் ஆஜரான
மூத்த வக்கீல் பி.வில்சன், ‘‘ கடந்த திமுக ஆட்சியில் பணியில்
சேர்க்கப்பட்ட 13 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்களை அரசியல் உள்நோக்கத்துடன்
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பணி நீக்கம் செய்துவிட்டது. இது தொடர்பாக
தொடரப்பட்ட வழக்கில், அந்த உத்தரவை ரத்து செய்தும் 13 ஆயிரம் பேருக்கும்
மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் நீதிபதி சுகுணா உத்தரவிட்டார்.
இதன்படி, மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட
வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதிகள், ‘ மக்கள் நலப் பணியாளர்களுக்கு
மீண்டும் வேலை வழங்குவது தொடர்பாக அடுத்த வாரத்திற்குள் தமிழக அரசு பதில்
அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக