நயன்தாரா, கணேஷ் வெங்கட்ராம் இடையே திடீர்
நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகிறது. படப்பிடிப்பில்
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசுவதாகவும் காதலிப்பது போல்
தெரிகிறது என்றும் படக் குழுவினர் கிசுகிசுக்கின்றனர்.
தனி ஒருவன் படத்தில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தின் கதாநாயகனாக ஜெயம் ரவி வருகிறார். ஜெயம் ராஜா இயக்குகிறார்.
கதாநாயகனுக்கு இணையான முக்கிய கேரக்டர் கணேஷ் வெங்கட்ராமுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. படப்பிடிப்பு துவங்கிய போது
இருவரும் சாதாரண நண்பர்களாக அறிமுகமாகி கொண்டனர். ஆனால் சில தினங்களில்
அந்த நட்பு இறுக்கமானது. காட்சிகள் படமாக்கப்பட்டதும் இருவரும் தனியாக போய்
உட்கார்ந்து கொள்கிறார்களாம். சிரித்து சிரித்து பேசிக் கொள்கிறார்கள்.
பிரிக்க முடியாதவர்கள் போல் ஆகிவிட்டனர் என்கின்றனர்.
கணேஷ் வெங்கட்ராம் ஏற்கனவே அபியும் நானும் படத்தில் திரிஷா ஜோடியாக நடித்தார். கமலின் உன்னைப்போல் ஒருவன் படத்தில் வாட்டசாட்டமான நேர்மையான போலீஸ் அதிகாரியாக வந்தார். பனித்துளி, தீயா வேலை செய்யனும் குமாரு படங்களிலும் நடித்துள்ளார். தனி ஒருவன் மட்டுமின்றி பள்ளிக் கூடம் போகாமலே, அச்சாரம், முறியடி போன்ற படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.
நயன்தாராவும் தமிழில் பிசியான நடிகையாக உள்ளார். நான்கு படங்கள் கைவசம் உள்ளன.
ஏற்கனவே சிம்பு, பிரபு தேவாவுடனான தொடர் காதல் முறிவுகளால் விரக்தியில் இருக்கும் நயன்தாராவுக்கு கணேஷ்வெங்கட்ராமின் நெருக்கம் புத்துணர்ச்சி அளித்துள்ளதாம்.
இது குறித்து கணேஷ் வெங்கட்ராமிடம் கேட்ட போது, நயன்தாராவும் நானும் நட்பாகத்தான் பழகுகிறோம் என்றார். நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்ற வதந்தி எங்கிருந்து பரவியது என தெரியவில்லை என்றும் கூறினார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக