சென்னையை அடுத்த போரூர் அருகே மவுலிவாக்கத்தில் 11 மாடி
கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் இருவர்
உயிரிழந்துள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி மீட்கப்பட்டோரில் 5 பேர்
நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ள 30 பேரை மீட்கும்
பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் புதிதாக 11 மாடி கட்டிடம் கட்டப்பட்டது.
இன்னமும் இதன் கட்டுமான பணிகள் முழுமையடையவில்லை. இந்த நிலையில் இன்று மாலை
சென்னையில் மழை பெய்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென அந்த கட்டிடம் அப்படியே இடிந்து தரைமட்டமானது. இந்த
இடிபாடுகளில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என முதலில்
கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று
மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருவர் பலி
கட்டிடம் முழுவதும் மண்ணோடு மண்ணாக புதைந்துள்ளதால் அங்கு மீட்புப்பணியில்
சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 15 பேர் மீட்கப்பட்டு சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மதுரையை அடுத்த டி. கல்லுப்பட்டியைச் சேர்ந்த மருதுபாண்டி (வயது 25) என்று தெரியவந்துள்ளது. இதன் பின்னர் கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிரிழந்த நிலையில் மற்றொரு தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தற்போது 30 பேர் வரை இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க ராட்சத விளக்குகள் பொருத்தப்பட்டு மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளில் மோப்ப நாயும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இடிவிழுந்ததா? கட்டிடத்தின் அடித்தளம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இடி தாக்கியே விபத்து நிகழ்ந்ததாக கட்டிடத்தை கட்டிவரும் கட்டுமான நிறுவனம் கூறுகிறது. போரூர் ஏரி இருந்த பகுதியில் கட்டிடம் கட்டியதாக கூறப்படுகிறது. இந்த பகுதியைச் சுற்றிலும் 5 மாடிகளைத் தவிர வேறு எந்த கட்டிடமும் இல்லை என்று கூறப்படுகிறது. இதுதான் முதன்முறையாக 11 மாடி கட்டிடம் ஆகும். இதனிடையே அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழு சென்னைக்கு விரைந்துள்ளது. முதல்வர் வேதனை- உத்தரவு இந்த துயர சம்பவத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வேதனை தெரிவித்துள்ளார். இந்த துயர சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் மீட்புப் பணியில் மெட்ரோ ரயில், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபடவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்கள்- கமிஷனர் சம்பவ இடத்தில் தமிழக அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். சென்னை மாநகர போலீஸ் ஆணையர் ஜார்ஜ் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். உதவி எண்கள் இடிபாடுகளில் சிக்கியவர்கள் பற்றிய நிலைமை அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்பு கொள்ள வேண்டிய போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை எண்: 044- 40012345 மேலும் ஒரு கட்டிட விபத்து இதனிடையே சென்னை அண்ணா மேம்பாலம் அருகே வீட்டின் சுவர் இடிந்ததில் பலர் படுகாயமடைந்தனர். 20 இரு சக்கரவாகனங்கள் tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக