இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் ஆணைப்படி 3 ஆயிரம் மசூதி, தர்க்காக்களுக்கு 4500 மெட்ரிக் டன் அரிசி வழங்குவதாக தமிழக
அரசின் பத்திரிகை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. பசித்திருக்கும் மக்களுக்கு அன்னதானம் வழங்குவது, கூழ் அளிப்பது நல்ல
விஷயம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மசூதிக்கு அரிசி தரும் தாயுள்ளம் ஏன் பல்லாண்டுகளாக ஆடிக்கூழ் ஊற்றும் அம்மன்
கோயில்களுக்கு அரிசி வழங்குவதில்லை?.
அறநிலையத்துறையின் இரும்புக்கோட்டையில் சிக்கி சீரழியும் திருக்கோவில்களில் கல்லா கட்டும் சில நூறு கோவில்களில்
மட்டும் அன்னதான திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் அறிவித்தார். அன்னதான திட்டத்தை நடத்திட யானை உருவில்
பக்தர்களை பயமுறு த்தும் பெரிய பெரிய உண்டியல், அதுவும் கோவில் பணத்தில் வைத்து பக்தர்களிடம் வசூலித்தே
அன்னதானம் நடைபெறுகிறது.
தமிழக முதல்-அமைச்சர் தனது ஆணைக்கு மதிப்பளிக்க தமிழக அரசின் பொது விநியோகத்துறையில் இருந்து தேவையான நல்ல அரிசியை அளித்திருக்க வேண்டாமா?. தமிழக முதல்-அமைச்சர் தமிழகத்தில் உள்ள அம்மன் கோவிலுக்கும், அன்னதான திட்டம் செயல்படுத்தம் திருக்கோவில்களுக்கும் தேவையான அரிசியை அளிக்க உத்திரவிட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக