அகமதாபாத்: குஜராத் முதல்வர் ஆனந்தி படேல் பயணம் செய்வதற்காக ரூ.100
கோடியில் ஜெட் விமானம் வாங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. குஜராத்
முதல்வராக இருந்த நரேந்திர மோடி லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக
பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து குஜராத்தின் புதிய முதல்வராக பெண் எம்எல்ஏ ஆனந்தி பென் படேல் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள செல்வதற்கு
வசதியாக புதிய விமானம் ஒன்றை வாங்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. உலகிலிலேயே கருப்பையை வாடகைக்கு விடும் வாடகை தாய்மார்கள் அதிகமுள்ள குஜராத்திற்கு இந்த டாம்பீகம் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம் ! அது சரி இந்த ஆனந்தி பட்டேலுக்கு அப்படி என்ன செல்வாக்கு மோடியிடம் ?
பேர் அமரும் வகையில் சூப்பர் கிங் ஏர் பீச் கிராப்ட் 200 என்ற ரகமுள்ள சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள ஜெட் விமானத்தை வாங்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டின் இறுதியில் அனேகமாக விமானம் குஜராத் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 15 ஆண்டுகள் உழைக்கும் திறனுடையதாக இந்த விமானம் இருக்கும். தற்போது ரூ.19.12 கோடியில் கேசுபாய் படேல் முதல்வராக இருந்த காலத்தில் வாங்கப்பட்ட விமானம் ஒன்று உள்ளது. இந்த விமானம் வாங்கப்பட்டது குறித்து அப்போதே கணக்கு தணிக்கை குழு பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது.
அப்போது வாங்கப்பட்ட அந்த விமானத்தில் ஆயுள் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனால் அந்த விமானத்தில் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளும் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. இதனால் முதல்வர் தனியார் விமானத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே புதிய விமானம் வாங்குவது தவிர்க்க இயலாதது என்கின்றனர் அதிகாரிகள். விமானம் வாங்குவது தொடர்பாக முதல் கட்டமாக ரூ.1 கோடியில் சர்வதேச டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகரித்துள்ள டாலர் விலை உயர்வு, விலைவாசி உயர்வு காரணமாக விமானத்தின் விலை ரூ.100 கோடியாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். dinakaran.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக