சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பஸ்நிலையம் அருகில், திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் (வயது
47), மர்ம கும்பலால் கடந்த 18-ந்தேதி இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார்.
சுரேஷ்குமார் கொலை வழக்கில்,
குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
இந்தநிலையில் அம்பத்தூரில் உள்ள அனைத்து ‘லாட்ஜ்’களிலும் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது
வெளியூரில் இருந்து வந்து தங்கியிருக்கும் நபர்களின் விவரங்களை சேகரித்தும், அவர்களின் அடையாள அட்டைகளையும்
போலீசார் பரிசோதனை செய்தனர். மேலும், தேடப்படும் கொலையாளிகள் யாரேனும் போலியான முகவரியில்
தங்கியிருந்தனரா? என்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக