வே.மதிமாறன் : தூய இனவாதத்தோடு தமிழ்த் தேசியம் பேசுகிற நாடார் ஜாதி உணர்வாளர்கள், ‘என்ன
எப்பப் பாரு.. பார்ப்பனர்களையே குறை சொல்றீங்க..?’ என்று பெரியார்
தொண்டர்களிடம் கேட்கிறார்கள்.
அவர்களின் இந்தக் கேள்விக்குப் பின்
இருப்பது தமிழ் உணர்வல்ல, பார்ப்பன நிறுவனங்களின் மூலமாக லாபமும் புதிய
பார்ப்பன உறவும், தனி மனித லாபங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதனால் தான் பெரியாருக்கு துரோகம்
செய்தவர்களையே சுட்டிக் காட்டி, ‘இது தான் பெரியார் இயக்கத்தின்
யோக்கியதையா?’ என்று நற்பெயர் எடுக்கிறார்கள் தங்களின் பா. நிறுவனங்களிடமும் புதிய பா. உறவுகளிடமும்.
கம்யுனிஸ்ட், திராவிட இயக்கம், பெரியார்,
தலித் இயக்கம் என்று பலரை விமர்சித்து ஊர் நியாயம் பேசுகிற அவர்கள், தன்
ஜாதி உணர்வாளர்களைக் குறித்து கள்ள மவுனம் காக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, ஈழப் பிரச்சினையில்
காங்கிரசின் துரோகம் என்ற அடிப்படையில் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,
ப. சிதம்பரம், நாராயணசாமி; காங்கிரஸ் அல்லாதவர்களில் கலைஞர், திருமாவளவன்,
வைகோ இவர்களை மிகக் கடுமையாக கண்டிக்கிற அவர்கள்,
காங்கிரசில் இருக்கிற குமரி அனந்தனையும் (மகள் தமிழிசை சவுந்தரராஜனை பாஜகவில் வசதியாக) வசந்த குமாரையும் கண்டிப்பதே இல்லை.
காங்கிரசில் இருக்கிற குமரி அனந்தனையும் (மகள் தமிழிசை சவுந்தரராஜனை பாஜகவில் வசதியாக) வசந்த குமாரையும் கண்டிப்பதே இல்லை.
இத்தனைக்கும் இவர்கள் இருவரும் ‘தலைவர் ராஜிவ் காந்தியை கொன்ற 3 தமிழர்களை தூக்கிலிடு’ என்று ஆர்ப்பாட்டமெல்லாம் நடத்தினார்கள். அப்போது கூட இவர்கள் தமிழ் உணர்வாளர்களால் கண்டிக்கப்படவேயில்லை.
கேட்டால்.. ‘இவர்களெல்லாம் ஒரு ஆளா?’ என்கிற பாணியில் பதில் சொல்லி, மீண்டும் அவர்களை பாதுகாக்கவே செய்கிறார்கள்.
அது மட்டுமல்ல, ‘கலைஞர் தமிழரல்ல ஆனால்
அவர் மகள் கனிமொழி தமிழர்’ என்று சொல்லுகிற ஆய்வாளர்களும் இருக்கிறார்கள்.
கனிமொழியின் தாயார் நாடாராம்.
நாடார் நிறுவனங்கள் தங்கள் ஊடகங்களில்
தமிழர் விரோத கருத்துக் கொண்ட பார்ப்பனர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
வைத்திருப்பதை மறைமுகமாக கூட சுட்டிக்காட்ட மறுக்கிறார்கள்.
ஈழத் தமிழர்களுக்காக தன்னை தியாகம் செய்த
தியாகி முத்துக்குமாரையும் தமிழன் என்று பார்ப்பதைவிட ‘நாடார்’ என்று
சுருக்கிப் பார்த்து அவர் எழுச்சியை கொச்சைப் படுத்துகிறார்கள்.
டாக்டர் அம்பேத்கர் இந்திய தேசியத்தை
ஆதரித்தார் என்று அவரை புறக்கணிக்கிற இவர்கள், இந்திய தேசியத்தை தீவிரமாக
ஆதரித்த காமராஜரை மிகத் தீவிரமாக ஆதரிக்கிறார்கள்.
சுயஜாதி உணர்வும் பார்ப்பன ஆதரவும் மட்டுமே கொண்ட இவர்கள், அதையே தமிழ்த் தேசியமாக அறிவிப்பது வேடிக்கை மட்டுமல்ல வேதனையும் கூட.
இதுபோன்ற காரணங்களுக்காக தான் கிறிஸ்த்துவ நாடார்களையும் இந்து நாடார்களையும் உறவாக இணைக்கிற ‘ஜாதி’ உணர்வு பற்றி எழுதியிருந்தேன்.
(‘‘மதமெல்லாம் பாக்காம தாயா புள்ளயா பழகுறாங்க.. இது தான் உண்மையான மத நல்லிணக்கம்’ என்று விளக்கம் கொடுத்தாலும் கொடுப்பார்கள்.)
*
“இதையும் அதையும் படித்தால் நாடார் சமூகத்தில் இருக்கிற பெரியார் தொண்டர்களும் கோபித்துக் கொள்வார்கள்..”
(‘‘மதமெல்லாம் பாக்காம தாயா புள்ளயா பழகுறாங்க.. இது தான் உண்மையான மத நல்லிணக்கம்’ என்று விளக்கம் கொடுத்தாலும் கொடுப்பார்கள்.)
*
“இதையும் அதையும் படித்தால் நாடார் சமூகத்தில் இருக்கிற பெரியார் தொண்டர்களும் கோபித்துக் கொள்வார்கள்..”
என்னங்க இது.. அப்புறம் எப்படிங்க அவர்கள் பெரியார் தொண்டர்கள்? mathimaran.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக