உன்னை யாரோ பெத்திருக்க
என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா.. என்று பாடும் நடிகர்கள் சிலரின்
நிஜ முகம் தெரியணுமா...
இதோ ஒரு சாம்பிள்...
அந்த பெரிய நடிகரின் பங்களா சென்னையின் சினிமா நகரான சாலிகிராமத்தில்
இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை அது. தினசரி பல ஆயிரம்
பேர், இதான் நம்ம நடிகர் வீடு என்று ஆசையுடன் நின்று பார்த்துவிட்டுச்
செல்வது வழக்கம்.
இது நடிகருக்கும் அவர் குடும்பத்துக்கும் பிடிக்கவில்லை. எனவே பங்களாவின்
சுற்றுச் சுவர்களை மேலும் ஒரு 5 அடிக்கு உயர்த்தச் சொல்லி உத்தரவிட்டார்
நடிகர்.
அதற்கென 5 தொழிலாளர்கள் அமர்த்தப்பட்டனர். பங்களாவின் ஒரு பகுதியில் கட்டிட
வேலையில் ஈடுபட்டிருந்தனர் ஐந்து தொழிலாளர்களும். அப்போது சூட்டிங்
முடிந்து வீடு திரும்பியிருக்கிறார் அந்த ஹீரோ. எதிர்பட்ட இந்த
உழைப்பாளர்களை பார்த்திருக்கிறார். உழைக்கும் வர்க்கம் எப்படியிருக்கும்..?
வெற்று மேனியும், அழுக்கு வேட்டியுடன், வியர்வை வழிய நின்றிருக்கிறார்கள்.
காருக்குள்ளிருந்து இதை பார்த்த ஹீரோ தன் உதவியாளரை அழைத்து 'நான் தினமும் வந்து போகும் போது இவங்க யாரும் என் கண்ணிலேயே படக்கூடாது' என்று உத்தரவிட்டிருக்கிறார். வீட்டு வேலை முடியும் வரை அந்த ஹீரோவின் கண்ணில் யாரும் படாமல் ஒளிந்து ஒளிந்தே வேலையை முடித்திருக்கிறார்கள். இது சினிமா காட்சி அல்ல. வலிக்க வைக்கும் நிஜம்!
/tamil.oneindia.i

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக