திங்கள், 23 ஜூன், 2014

திமுகவின் சகல மட்டங்களிலும் கடும் கொந்தளிப்பு ? வென்றால் அவர்கள் (?) தோற்றால் நாங்களா ?

சென்னை : கட்சி நிர்வாகிகள், 33 பேரை, தி.மு.க., மேலிடம் நேற்று முன்தினம், 'சஸ்பெண்ட்' செய்தது, அந்தக் கட்சித் தொண்டர்கள் மற்றும் கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பாவிகள் பலரை பழிவாங்கி விட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய, தி.மு.க.,வில், சமீபத்தில், ஆறு பேர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, தோல்விக்கான காரணங்கள் குறித்தும், கட்சி யின் மறுசீரமைப்பு குறித்தும், 150 பக்க அறிக்கையை, கட்சி தலைமைக்கு வழங்கியது.
அதன் அடிப்படையில், தி.மு.க.,வில், மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு, புதிதாக, 33 மாவட்டங்கள், கட்சியில் அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்டன.  திமுகவில் கலைஞரை விட ஸ்டாலினை விட துர்கா ஸ்டாலின்தான் பவர்புல் தலைவராம் அவரது லிஸ்டின் படிதான் வேட்பாளர் மாவாட்ட செயலாளர் ? நெசமாலுமா ? இரண்டு அம்மாக்களை நாடு தாங்குமா ?


இந்நிலையில், லோக்சபா தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அளித்த அறிக்கை அடிப்படையில், தோல்விக்கு காரணமான, மூன்று மாவட்ட செயலர்கள் உட்பட, 33 நிர்வாகிகளை, நேற்று முன்தினம், தி.மு.க., மேலிடம், 'சஸ்பெண்ட்' செய்தது. அவர்கள் விளக்கம் அளிக்க, ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுஉள்ளது.ஆனால், இந்த நீக்கம் கட்சி யினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலின் போது, உண்மையில், பாதகமாக செயல்பட்டவர்கள் பலரை விட்டு விட்டு, கட்சிக்காக நீண்ட காலம், நேர்மையாக உழைத்தவர்களையும், அப்பாவிகளையும் பழிவாங்கி விட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில், ஸ்டாலினிடம் விசாரணை நடத்த வேண்டும்' என, சி.பி.ஐ., தரப்பில் ஆரம்பத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த விவரத்தை, முந்தைய அரசில், நிதித்துறை இணை அமைச்சராக இருந்த பழனி மாணிக்கம், கட்சிமேலிடத்திற்கு சரிவர தெரிவிக்கவில்லை. அதன் காரணமாகவே, பழிவாங்கும் எண்ணத்தோடு, தற்போது அவரை மாவட்ட செயலர் பதவியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்துள்ளனர்.ஆனாலும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவரை, சஸ்பெண்ட் செய்துஉள்ளது, தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை தி.மு.க., வேட்பாளர் மற்றும் அவரின் மகனை திருப்திப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில், வேலுாரில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வெற்றிக்கும், அரக்கோணம் தி.மு.க., வேட்பாளரின் வெற்றிக்கும், முன்னாள் அமைச்சரான துரைமுருகனின் ஆதரவாளர்கள் சரிவர வேலை செய்யவில்லை. அதனால், துரைமுருகனை, 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும் என, எதிர்க் கோஷ்டி தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதேபோல், திருச்சி தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.பி., ஒருவர் மீதும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் எம்.பி., மீதும், தேனி மாவட்ட தி.மு.க., முக்கிய புள்ளி ஒருவர் மீதும், சரியாக தேர்தல் பணியாற்ற வில்லை என, குற்றம் சாட்டப்பட்டு, அவர்களை நீக்க வேண்டும் என, கட்சித் தலைமையிடம் கோரப்பட்டது.
ஆனால், இவர்களை எல்லாம் விட்டு விட்டு, கட்சிக்காக நீண்ட காலம் உழைத்த, அப்பாவிகள் பலரை, சஸ்பெண்ட் பட்டியலில் சேர்த்து, பழி வாங்கிவிட்டனர். உண்மையில், தேர்தலின் போது, கட்சிப் பணியாற்றாமல் ஏமாற்றியவர்கள், வேட்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, 'டிமிக்கி' கொடுத்தவர்கள் பலர் இருக்க, அவர்களை எல்லாம் விட்டு விட்டு, ஒரு தலைப்பட்சமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது, கட்சிக்காக நியாயமாக பாடுபடும் எங்களுக்கெல்லாம், மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன. dinamalar.com

கருத்துகள் இல்லை: