வியாழன், 26 ஜூன், 2014

கமல்: சினிமாவுக்கு எந்த அரசும் நல்லது செய்யவில்லை ! பச்சை பொய் !சகல அரசுகளும் சினிமாவுக்கு தானே சேவகம் செய்கிறது ?

சினிமாவுக்கு எந்த அரசும் நல்லது செய்யவில்லை. நான் இந்த அரசை மட்டும் சொல்லவில்லை. இந்தியா முழுவதும் இருக்கிற பதினைந்து அரசாங்கத்தையும்தான் சொல்கிறேன்.
சந்தானம் நடிக்கும் ‘வாலிப ராஜா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ‘தேவி தியேட்டரில் நடைபெற்றது.   பாடல்களை கமல் வெளியிட, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் கமல் பேசும்போது,   ‘’ சினிமா என்பது விசித்திரமான உலகம். இங்கு ஏராளமான திறமை சாலிகள் இருக்காங்க. அதே நேரம் நான் வியந்த பல திறமைசாலிகளில் பலர் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. >நானெல்லாம் ஏதோ குலுக்கலில் விழுந்த மாதிரி இந்த இடத்திற்கு வந்திருப்பதாக நினைக்கிறேன். மக்களின் பணத்தில் மகராஜாக்களாக வாழும் நட்சத்திரங்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் ? மனசாட்சியே இல்லாமல் கமல் பேசலாமா ?
அரங்கேற்றம் படத்தில் நான் நடித்து பல நாட்களுக்கு பிறகு ஒரு நாள் சாலையில் நடந்து போய் கொண்டிருந்தேன். அப்போது காரில் போன கே.பி.சார் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே, ‘ஆபிசுக்கு வந்துரு’ என்றார்.>அபூர்வ ராகங்கள் படத்தில் ஹீரோவாக நடிக்க ஸ்ரீகாந்த்தை கேட்டார்களாம். அவர் பிசியாக இருந்தி ருக்கிறார். ‘அதுக்காக ரோட்ல போறவனையா நடிக்க வைக்க முடியும்’ என்று பாலசந்தர் சார் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் ரோட்டில் போய் கொண்டிருந்த என்னை பார்த்தாராம். அதனால்தான் அந்த சிரிப்பு. அன்று அந்த சாலையில்  நான் நடந்து போகாவிட்டால், எனக்கு அப்படியொரு படம் கிடைத் திருக்குமா என்று தெரியாது. சினிமாவுக்கு எந்த அரசும் நல்லது செய்யவில்லை. நான் இந்த அரசை மட்டும் சொல்லவில்லை. இந்தியா முழுவதும் இருக்கிற பதினைந்து அரசாங்கத்தையும்தான் சொல்கிறேன். ஆனாலும் சினிமா இயங்கிக் கொண்டுதானிருக்கிறது. இங்கு பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை இருந்து கொண்டேயிருக்கிறது’’ என்று தெரிவித்தார். nakkheeran.in

கருத்துகள் இல்லை: