கரூர்
மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டியை சார்ந்தவர் பொன்னுசாமி,
இவர் இப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நாகவள்ளி.
இவருடைய இரண்டாவது மகள் வினிதா (17) இவர் 12ம் வகுப்பு முடித்து கரூர்
அருகேயுள்ள வீரராக்கியம் தனியார் கொசுவலையில் பணிபுரிந்து வந்தார்.
வரும்
2ம் தேதி தொட்டியத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்க உள்ள
நிலையில் விடுமுறை காலத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில்
திங்கள்கிழமை (23-06-14) மாலை வேலை முடிந்து கிருஷ்ணராயபுரத்திலிருந்து
பிச்சம்பட்டிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள்
வினிதாவை வெற்றிலை கொடிக்கால் பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம்
செய்ததோடு அவரை கொலைசெய்து அங்கேயே விட்டு சென்றுள்ளனர்.
பின்னர் வினிதாவை காணவில்லை என்று தேடிய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நீண்ட நேரம் தேட ஆரம்பித்த போது வினிதா ஒட்டி வந்த சைக்கிள் கொடிக்கால் அருகே ரோட்டில் கிடந்தது. இதையடுத்து அப்பகுதியில் தேடிய வினிதாவை வெற்றிலை கொடிக்காலில் பிணமாக கண்டெடுத்துள்ளனர். இறந்த வினிதாவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த மர்ம நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என கூறி கரூர் டூ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் வினிதாவை காணவில்லை என்று தேடிய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நீண்ட நேரம் தேட ஆரம்பித்த போது வினிதா ஒட்டி வந்த சைக்கிள் கொடிக்கால் அருகே ரோட்டில் கிடந்தது. இதையடுத்து அப்பகுதியில் தேடிய வினிதாவை வெற்றிலை கொடிக்காலில் பிணமாக கண்டெடுத்துள்ளனர். இறந்த வினிதாவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த மர்ம நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என கூறி கரூர் டூ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம்
குறித்து அறிந்த மாயனூர் போலீஸார் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர்
ராஜேஸ்வரி தலைமையில் மற்ற போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடனே
குற்றச்செயலலில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்வதாக கூறியதையடுத்து சாலை
மறியல் கைவிடப்பட்டது. இதனால் கரூர் டூ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்
சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து
குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் என சந்தேகத்தின் அடிப்படையில் 7 பேரை கைது
செய்து போலீஸார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்
உரிய நடவடிக்கையை போலீஸார் எடுக்கவில்லை எனவும் போலீஸார் அலட்சியமாக
செயல்படுவதாக கூறி கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வினிதாவின்
உடலை வாங்க மறுத்து மருத்துவமனை அருகே வினிதாவின் உறவினர்கள் மற்றும்
பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும்
குற்றவாளிகள் குறித்தும், அவர்கள் மீதும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை
என குற்றச்சாட்டு விடுத்தனர். மேலும் இறந்த இப்பெண்ணிற்கு உரிய நீதி
கிடைக்க வேண்டும் இதே போல பெண்களுக்கு எதிராக தொடர்ந்து குற்றங்கள்
நடைபெறுவதாகவும் கூறி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் வலியுத்தினர்.
இதை
தவிர பிச்சம்பட்டி செல்லும் வழியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை
இருப்பதாகவும், அதனால் தான் இது போல குற்றச்செயல்கள் அதிகரிப்பதாகவும் கூறி
சாலை மறியல் நீண்ட நேரம் நடைபெற்றது.
இதையடுத்து
கரூர் கோட்டாட்சியர் கார்த்திகேயன், திருச்சி காவல் துறை கண்காணிப்பாளர்
ராஜேஸ்வரி அகியோர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். உடனே
குற்றவாளிகளை கைது செய்து தீவிர நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து
பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் பிரேதத்தை வாங்கி சென்றனர். இளம்பெண்ணை
பாலியல் பலாத்காரம் செய்து விட்டு பின்னர் கொன்ற குற்றவாளிகளின்
வெறிச்செயல் தமிழக அளவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால்
இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
ஜெ.டி.ஆர். nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக