சென்னை அடையாறு பாலத்தில் தொழில் அதிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். புதன்கிழமை காலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.சென்னை
அருகே கந்தன்சாவடியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. தொழில் அதிபரான
இவருக்கு வயது 82. எலக்ட்ரானிக் கடை அதிபர். புதன்கிழமை காலை காரில் வந்த
அவர், அடையாறு திரு.வி.க. பாலம் அருகே வந்ததும், காரை நிறுத்தச் சொன்னார்.
காரை டிரைவர் நிறுத்தினார். காரை விட்டு இறங்கிய திருநாவுக்கரசு, மெதுவாக
நடந்து சென்று பாலத்தின் கைப்பிடிக்கு அருகே சற்று நின்றவர் திடீரென்று
கீழே குதித்து விட்டார்.
இதனால்
அதிர்ச்சி அடைந்த டிரைவர் இதுகுறித்து அபிராமபுரம் காவல்நிலையத்தில் தகவல்
கொடுத்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீயணைப்புத்துறை வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்புத்துறை
வீரர்கள் ஒன்றரை மணி நேரம் போராடி திருநாவுக்கரசு உடலை மீட்டனர்.
மீட்கப்பட்ட அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. வயதான காலத்தில் இவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக