கொண்டு அசர வைக்கும் படத்தைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்த படங்களின் வரிசையில் அதிதி-யை சேர்க்கலாம். மலையாள படமான காக்டெயில் படத்தின் ரீமேக்கான இப்படத்தை பரதன் இயக்கி இருக்கிறார்.கலர்ஃபுல் காதல் காட்சிகள், அதிரடி சண்டை சாகசங்கள், குதூகலிக்கும் குத்தாட்டங்கள் என எதையும் நம்பாமல் திரைக்கதை சுவாரஸ்யமாக நகர்கிறது. யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ் அதிர்ச்சியாகவும் அதே சமயம் நியாயமான கேள்வியாகவும் அமைந்திருக்கிறது.ரியல் எஸ்டேட் பிசினஸில் திறமையானவர் நந்தா. தன் முதலாளிக்கு விசுவாசமாக இருந்து பல வசதிகளையும் பெற்றுக்கொள்கிறார். இதனால், அவருக்கு எதிரிகள் அதிகரிக்கிறார்கள். மிரட்டல்கள் நந்தாவை தொடர்கின்றன. தன் மனைவி, மகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நந்தாவுக்கு சோதனைக் காலம் தொடங்குகிறது.
குழந்தையை கடத்தி வைத்து ஒருவர் பணம் கேட்டு மிரட்டுகிறார், அவரின் பிசினஸ் சீக்ரெட்டுகளை இன்னொரு கம்பனிக்கு கொடுப்பது என டார்ச்சர்கள் நந்தாவை துரத்துகின்றன. குழந்தை அவர் பிடியில் இருப்பதால் அவர் சொல்வதையெல்லாம் செய்ய நந்தாவும் அவரது மனைவியான அநன்யாவும் சம்மதிக்கிறார்கள். யார் இந்த மனிதர், எதற்காக மிரட்டுகிறார்? அவரின் தேவை தான் என்ன? என்று நந்தாவைப் போலவே நமக்கு மண்டை வெடிக்கிறது!இப்படி சஸ்பென்ஸ் மேல் சஸ்பென்ஸ் என காட்சிகள் நீண்டு கொண்டே போக இறுதியாக ஒரு சர்ப்ரைசிங் க்ளைமாக்ஸ் கைதட்ட வைக்கிறது.கல்யாணம் ஆன பிறகும் ப்ளேபாயாக இருக்கும் கணவன்மார்கள் தன் மனைவி மட்டும் பத்தினியாக இருக்க வேண்டும் என நினைப்பது என்பது எந்த விதத்தில் நியாயம்? மனைவி கண்ணகியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் கணவன், தான் மட்டும் கோவலனாக இருப்பேன் என்று அடம்பிடித்தால் முடியுமா? இந்த கேள்வி தான் படம்!<>கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறார் நந்தா, க்ளைமாக்ஸ் காட்சியில் தன் குழந்தைக்காக கொலையையும் செய்ய நினைக்கும் காட்சியில் அசத்தல் நடிப்பு. அநன்யா பவர்ஃபுல் கதாபாத்திரத்தை மிகவும் எளிமையாக கையாண்டு சபாஷ் போட வைக்கிறார்.தம்பி ராமைய்யா பல காட்சிகளில் சிரிக்க வைத்தாலும் சில இடங்களில் கடிக்கிறார்!>படத்தின் அசர வைக்கும் இன்னொரு கதாபாத்திரம், புதுமுகம் நிகேஷ் ராம். யாருடா இந்த மனிதர் என்று ஆச்சரியப்பட வைக்கிறார் ஒவ்வொரு காட்சியிலும். படம் முழுக்க வில்லனாக வலம் வந்து நம் மண்டையைக் குடைந்தாலும், க்ளைமாக்ஸ் காட்சிக்குப் பிறகு ‘இவரையா தப்பா நெனச்சோம்!’என்று நெகிழவைக்கிறார். இன்னும் திரைத்துறையில் தொலைதூரப் பயணம் போக வாழ்த்துகள் கமர்ஷியல் என்ற பெயரில் படத்தைக் கெடுக்காமல் மலையாள படத்தின் அதே திரில்லிங்கை கொடுத்த இயக்குனர் பரதனைப் பாராட்டலாம்.b>அதிதி - திரில்லிங்! nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக