திங்கள், 10 ஜூன், 2013

Rahman இசை slow பாய்சன் போன்றது என பாடகர் கமென்ட்

சென்னை: ரகுமான் இசை ஸ்லோ பாய்சன் போன்றது என பாடகர் கமென்ட் அடித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த ‘கஜினி’, ‘டெல்லி 6’, ‘சிவாஜி’, ‘ராவண்’, ‘ராஞ்சனா’ போன்ற இந்தி படங்களில் பாடல்கள் பாடி இருப்பவர் ஜாவித் அலி. இவர் தமிழில் ‘மாற்றான்’ படத்தில் இடம்பெற்ற ‘கால் முளைத்த பூவே’, விஜய்யின் ‘நண்பன்‘ படத்தில் இடம்பெற்ற ‘இருக்கானா’ உள்ளிட்ட பல்வேறு பாடல்கள் பாடி இருக்கிறார்.
இவர் கூறியது: ரகுமான் இசையில் அமைந்த பாடல்கள் ஸ்லோ பாய்சன் போன்றது. இது உடலையும், மூளையையும் மெதுவாக பாதிக்கும். உறுப்புகள் பாதிக்கப்பட்டபின் அதிலிருந்து தப்பிக்க முடியாது. ‘ராஞ்சனா’ படத்தில் இடம்பெற்ற ‘டம் டக்‘ பாடல் இந்த வகையை சேர்ந்தது. இளைஞர்கள், ஜோவியலான சண்டை, நட்பு, கொண்டாட்டம் என எல்லாவற்றுக்கும் இந்த பாடல் பொருந்தும். இவ்வாறு ஜாவித் அலி கூறினார். ரகுமானை புகழ வேண்டும் என்ற நோக்கில் ஜாவித் அலி அவரது இசையை ஸ்லோ பாய்சனுடன் ஒப்பிட்டதாக கூறப்பட்டாலும் ரகுமான் ரசிகர்களிடையே இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இணையதளத்தில் அவர்கள் ஜாவித் அலி கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: