வியாழன், 13 ஜூன், 2013

விசுவின் பேராசை ! தில்லு முல்லு வழக்கு தள்ளுபடி ! ஹிந்தி கோல் மாலுக்கு விசு எப்படி வழக்கு போட முடியும் ?ரஜினி நடித்த தில்லு முல்லு படம் 'தில்லு முல்லு2' என்ற பெயரில்
தற்போது
தயராகியுள்ளது. இதில் ரஜினி கேரக்டரில் சிவா நடித்துள்ளார். இந்த படம் வருகிற 14-ந் தேதி வெளியாகிறது. இதற்கிடையே தில்லு முல்லு 2 படத்துக்கு தடை விதிக்ககோரி டைரக்டர் விசு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் தில்லு முல்லு படத்துக்கு நான் தான் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளேன். தற்போது அந்த படத்தை “தில்லு முல்லு 2” என்ற பெயரில் வேந்தர் மூவிஸ் தயாரித்து உள்ளது. இதற்கு என்னிடம் அனுமதி கேட்கவில்லை. எனவே “தில்லு முல்லு 2” படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது. நீதிபதி சுதாகரன் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வேந்தர் மூவிஸ் சார்பில் மூத்த வக்கீல் நடராஜன் ஆஜரானார். அவர் வாதாடும் போது இந்தி மொழியில் வெளியான கோல்மால் என்ற படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அந்த படத்தை தயாரித்த நிறுவனத்திடம் இருந்து உரிய பணத்தை கொடுத்து “தில்லு முல்லு 2” படத்தை தயாரித்து உள்ளோம். விசுவின் வசனத்தையோ, திரைக்கதையோ நாங்கள் பயன்படுத்தவில்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுதாகரன், விசுவின் மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: