செவ்வாய், 11 ஜூன், 2013

மெக்சிகோவில் நிர்வாண சைக்கிள் பேரணி தாங்கள் சுதந்திரமானவர்கள் என்பதை உணர்த்தவாம்

சுமார் 3 ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் 20 கி.மீ. தூரம் சைக்கிளில் ஜலிஸ்கோ
மாநிலத்தில் உள்ள பெரிய நகரமான குவாடலஜாராவிற்கு பேரணியாகச் சென்றனர். அவர்களில் சிலர் நிர்வாணமாகவும், சிலர் நீச்சல் உடைகளுடனும் மற்றும் சிலர் உள்ளாடைகளுடனும் ஊர்வலத்தில் பங்குகொண்டனர். இந்த ஊர்வலத்தைப் பார்த்த மக்கள் வினோதமான பார்வையுடன் சங்கோஜமான சிரிப்பை அளித்தனர். தலைநகர் மெக்சிகோ சிட்டி அருகிலும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுபோன்ற நிர்வாண சைக்கிள் ஊர்வலத்தில் ஈடுபட்டனர். சிலர் தங்களது உடம்பில் உடையக்கூடியது என்ற ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தனர். சிலர் புகையினை ஒழித்து சைக்கிள்களை உபயோகப்படுத்துவோம் என்ற ஸ்டிக்கர்களையும், இந்த நகரம் எல்லோருக்குமானது, சைக்கிள்களும் இங்கே அனுமதிக்கப்பட வேண்டும் என்ற பொருள்படும்படியும் ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தனர்.
நிர்வாணமாக சென்றதன்மூலம் பரபரப்பான போக்குவரத்தில் தங்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து உணர்த்தியதாக அவர்கள் கூறினர். ஆனால் குவாடலஜாராவில் ஊர்வலம் சென்றவர்கள் நகரின் பழமைவாதத்தை எதிர்க்க ஒரு வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக் கொண்டனர்.
மிகவும் பழைமைவாத நகரமான அங்கு இப்படி நிர்வாண சவாரி செய்வதென்பது கத்தோலிக்க மத ஒழுக்கப்பண்புகளை மீறிய செயலாகக் கருதப்படும் என்று இந்த ஊர்வலத்தில் முதன்முதலாகப் பங்கு கொண்ட ஒரு ஆர்ப்பாட்டக்காரர் தெரிவித்தார்.
தாங்கள் சுதந்திரமானவர்கள் என்பதை உணர்த்துவதே முக்கியமானது என்றும் அவர் கூறினார். சில வருடங்களாக ஜலிஸ்கோ மாநிலத்தில், ஓரினச் சேர்க்கைளார்களின் பெருமைமிகு அணிவகுப்பு உட்பட, தூண்டுதலாக இருக்கக்கூடிய நிறைய நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: