சனி, 15 ஜூன், 2013

Hydrabad தெலுங்கான போராட்டம் ! கடும்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது

ஆந்திரா தலைநகர் இன்று ஒரு வித்தியாசமான காட்சியைக் கண்டது.
மொத்தம் 30,000 போலீசார், ஹைதராபாத் நகரையே தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். ஆந்திரா சட்டசபை, மற்றும் அதைச் சூழவுள்ள பகுதிகளில்தான் ஆர்ப்பாட்டங்கள் அதிகம் நடக்கலாம் என்பதால், அங்கு மட்டும் 10,000 போலீசார் மற்றும் 2,000 மத்திய துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
ஹைதராபாத் நகரமே துடைத்து விடப்பட்ட காலி நகரம் போல காணப்பட்டது.
தனி தெலுங்கானா போராட்டம்தான் இன்று ஹைதராபாத் நகரையே வெறிச்சோடிப் போக செய்துள்ளது. இன்று ஆந்திர சட்டசபையை முற்றுகையிட போவதாக அறிவிப்பு வெளியானதால், அசம்பாவிதம் எதுவும் நடவாமல் தடுக்க ஆயிரக்கணக்கான போலீசார் ஹைதராபாத் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலையில் தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி மற்றும் பா.ஜ.க. கட்சியினர் பலர் சட்டசபையை முற்றுகையிட புறப்பட்ட போது கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் உஸ்மானியா பல்கலை மாணவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க, பல மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் கொதிப்படைந்த நிலையில் உள்ளனர்.

சட்டசபை இன்று காலை தொடங்கியதும் தனி தெலுங்கானா கோரி எம்.எல்.ஏ.க்கள் பலர் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அமளி ஏற்பட்டதை அடுத்து சபை ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையில் தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் சம்மையா மற்றும் வினய்பாஸ்கர் இருவரும் சட்டசபை கட்டடத்தின் மாடியில் ஏறி நின்றபடி, அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து விடுவதாக மிரட்டினர். “தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும். கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால், இங்கிருந்து குதித்து விடுவோம்”
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சபை காவலர்கள் மேலே சென்று இரு எம்.எல்.ஏ.க்களையும் மீட்டு கீழே கொண்டு வந்தனர்.
ஹைதராபாத் மற்றும் சைபராபாத் பகுதிகளில் 144 தடையுத்தரவு இன்று காலை போடப்பட்டது. நகரெங்கும் போலீஸ் சோதனைச் சாவடிகள் தோன்றின. சைபராபாத்தில் மட்டும் 58 சோதனைச்சாவடிகள் போடப்பட்டன. ஹைதராபாத்தில் 17 சோதனைச் சாவடிகள்.
மிகவும் பிசியான ஹைதராபாத்தை நீங்கள் பல தடவைகள் பார்த்திருக்கலாம். இன்று கோஸ்ட் சிட்டி அல்லது ‘பிசாசு நகரம்’ போல காணப்பட்டது அந்த நகரம். இன்று அங்கு எடுக்கப்பட்ட போட்டோக்கள் மிகவும் வித்தியாசமான நகரை உங்களுக்கு காட்டும்
viruvirupu.com

கருத்துகள் இல்லை: