சனி, 15 ஜூன், 2013

போதையில் மருமகன் வெறிச்செயல் கழுத்தை அறுத்து மாமியார் கொலை! Tasmac Profit

மதுராந்தகம்: கர்ப்பிணி மனைவியை குடிசை வீட்டுக்குள் தள்ளி பூட்டிவிட்டு,
மாமியாரை அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து கொன்ற மருமகனை போலீசார் தேடி வருகின்றனர். மாமண்டூரில் இன்று காலை நடந்த பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுராந்தகம் அடுத்த படாளம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் நாகா (50). மனைவி நவநீதம் (48). இவர்களது மகள் மீனா (25). மாமண்டூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஓட்டல் ஊழியர் அய்யப்பன் (30). இவருக்கும் மீனாவுக்கும் 2010&ல் திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது மீனா மீண்டும் கர்ப்பமாக உள்ளார். மாமண்டூரில் கோயில் திருவிழா நடக்கிறது. இதற்காக மகள் வீட்டுக்கு நவநீதம் நேற்று சென்றார். இரவு அங்கேயே தங்கிவிட்டார். வெளியே சுற்றிவிட்டு இன்று காலை 8 மணிக்கு அய்யப்பன் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இரவு முழுவதும் எங்கே போனீர்கள் என்று மீனா கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதை நவநீதம் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அய்யப்பன், மனைவியை குடிசைக்குள் தள்ளி பூட்டினார். பின்னர் அரிவாள்மனையை எடுத்து வந்து நவநீதம் கழுத்தை அறுத்துள்ளார். வலியால் துடித்த நவநீதம், அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.


சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தின் திரண்டு வந்தனர். அதற்குள் அய்யப்பன் தப்பியோடி விட்டார். இதுபற்றி படாளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அசோக் மேத்தா மற்றும் போலீசார் வந்து, நவநீதம் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிசை வீட்டில் இருந்து மீனாவை மீட்டனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய அய்யப்பனை தேடி வருகின்றனர். மாமியாரை மருமகன் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கருத்துகள் இல்லை: