திங்கள், 10 ஜூன், 2013

Hogenakkal கலைஞர் கொண்ட வந்த திட்டம் என்பதால் Delaiying

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தி.மு.க. சார்பில், தி.மு.க. தலைவர் கலைஞர்
90வது பிறந்த நாள் விழா மற்றும்  ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை வழங்கிய தி.மு.க. தலைவர் கலைஞருக்கு மற்றும் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.இதில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது ’’திமுக தலைவர் கலைஞரால் உருவாக்கி தயாரிக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டடத்தை தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு அர்பணித்துள்ளார். அவரை பாராட்ட இன்று நடைபெறும் நன்றி பாராட்டு விழா கூட்டத்தில் நான் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
;திமுக தலைவர் கலைஞரின் பிறந்தநாள் ஜுன் 3 ஆகும். இன்று ஜுன் 9ந் தேதி இங்கு விழா கொண்டாடப்படுகின்றது. ஏன் அடுத்த ஆண்டு வரை கூட கொண்டாடுவோம். அது நமக்கு கிடைத்த பெருமை. அவரது பிறந்தநாளை தமிழகம் மட்டுமல்ல, பக்கத்து மாநிலத்தை சேர்ந்தவர்கள், தமிழர்கள் வாழுகின்ற நாடுகளில் எல்லாம் கொண்டாடுகிறார்கள்.


கடல் கடந்து வாழும் தமிழர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அரணாக அவர் விளங்குகின்றார்.  தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு உருவாக்கி தரப்பட்ட து ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம். இந்த திட்டம் முழுமையாக நிறைவு பெறாத நிலையில் அவசர அவசரமாக ஒரு தேதியை முடிவு செய்து திட்டத்தை தொடங்கிவைக்க முடிவுசெய்தார்கள். பின்னர் சென்னையில் கோட்டையில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் முறையில் தொடங்கி வைத்துள்ளார்.
  எதற்காக இந்த அவரசம்? நான்  கடந்த  6 மாதங்களில் இளைஞர் பயிற்சி பாசறை கூட்டம், தேர்தல் நிதி அளிப்பு பொதுக்கூட்டம், பாராளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம், என மூன்று முறை வந்தேன். அப்போது ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் பற்றி பேசினேன். திமுக ஆட்சியில் 90 சதவீதம் பணிகள் முழுமை பெற்று இருந்தன. ஆனால் அதிமுக ஆட்சியில் 10 சதவீத பணிகளை முடிக்க தாமதம் ஆனது.
 தலைவர் கலைஞர் கொண்ட வந்த திட்டம் என்பதால் அவ்வளவு தாமதப்படுத்தனார்களா? என தெரிய வில்லை. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல திட்டங்களை, அதிமுக ஆட்சி வந்ததும் கிடப்பில் போட்டார்கள். அதே நேரத்தில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை தாமதப்படுத்த என்ன காரணம்? என்று கேட்டேன்.
மேலும் இது 2 மாவட்டங்களில் ஜீவாதார பிரச்சனையாகும். என்னிடம் 2 மாதங்கள் இப்பணியை முடிக்க அதிகாரத்தை தாருங்கள் முடித்து தருகிறேன் என்று கூறினேன். இதை பார்த்த முதலமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்களை அழைத்து பேசி அவசரமாக இந்த பணிகளை முடித்தாக கூறிதொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை யார் கொண்டு வந்தார்கள்? என்பது மக்களுக்கு தெரியும்.
ஜப்பான் நாட்டுக்கு நான் சென்று பேசி இந்த திட்டத்திற்கான நிதி பெற்று வந்தது மக்கள் அறிவார்கள். திமுக ஆட்சியில் இந்த திட்டத்திற்கு அதிக அளவு முக்கியதும் அளித்து பணியாற்றி வந்தோம். திமுக ஆட்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை தந்தோம்.
தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வந்தது. ஆனால் திமுக ஆட்சியில் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டதாக இந்த மாவட்ட அமைச்சர் அபாண்டாமான பொய்யை கூறி வருகின்றார். கடந்த 1997-ல் திமுக ஆட்சியில் ரூ.576 கோடி மதிப்பில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு திட்ட மதிப்பீட தயாரிக்கப்பட்டது.
பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஒரு இம்மி அளவ கூட பணிகள் நடக்கவில்லை. அவ்வாறு நடந்ததாக நிரூபித்தால் இதே மேடையில் நான் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன்.  திமுக முயற்சியால் தான் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. 2006-ல் திமுக ஆட்சியில் நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ரூ.1928 கோடி ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் இந்த திட்டம் 26.6.2008-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. 5 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு இந்த திட்டப்பணிகளை நான் 20 முதல் 25 முறை இந்த மாவட்டஙகளுக்கு வந்து பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தினேன். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஓசூரில் நடந்த கூட்டத்தில் அதிமுக அமைச்சர் கே.பி முனுசாமி 3 கேள்விகள் கேட்பதாக கூறினார்.
நீங்கள் அமைச்சர், நான் தான் உங்களிடம் கேள்விகள் கேட்கவேண்டும். எதிர் கட்சியிடம்தான் அளும் கட்சியினர் பதில் கூற வேண்டும். 2012-ல் முடிக்க வேண்டிய இந்த திட்டம் தாமதமாக யார் காரணம். இப்போது திறந்து வைத்தாக கூறுகிறீர்களே இன்னும் 50 சதவீத இடங்களுக்கு கூட தண்ணீர் போய் சேரவில்லை.
பாதள சாக்கடை திட்டத்தை நாங்கள் அறிவித்து திரும்ப பெற்றதாக கூறினார். கோர்ட்டில் தடை ஆணை பொறும்போது அதை சட்டரீதியாக சந்திக்க வேண்டிய சூழல் இருந்ததால் திரும்பபெற நேரிட்டது. இந்த அமைச்சர் கூட சட்டமன்றத்தில் சில இடங்களில் பாதள சாக்கடை திட்டத்தை திரும்ப பெற்றதை கூறியுள்ளர். இந்த 2 ஆண்டுகளில் பாதள சாக்கடை திட்டத்தை தொடங்கி உள்ளீர்களா?
சமச்சீர் கல்வி திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாக இன்று மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் நிலை உருவாகி உள்ளது. தமிழகம் தற்போது கொலை - கொள்ளை நிறைந்த நகரமாக மாறிவிட்டது. சென்னையில் அதிகளவு குற்றங்கள் நடக்கின்றது. அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் குற்றங்கள் நிறைந்த மாவட்டமாகிவிட்டது’’ என்றார்.
 – எம்.வடிவேல்nakkheeran.in

கருத்துகள் இல்லை: