ஞாயிறு, 9 ஜூன், 2013

திருப்பதியில் காணமல் போவோர் தொகை அதிகரிப்பு ! அநேகர் கண்டுபிடிக்க படவில்லை

திருப்பதி: திருமலையில் காணாமல் போவோரின் எண்ணிக்கை அதிகமாகி திருமலையில் கூட்ட நெரிசல் சமயத்தில், தங்குவதற்கு வாடகை அறைகள் கிடைக்காததால், வெளியிடங்களில் பக்தர்கள் உறங்க நேரிடுகிறது. அந்த நேரத்தில், குழந்தைகள் காணாமல் போவதும், கடத்தப்படுவதும், அதிகமாக நடக்கிறது. பெற்றோரும், உறவினர்களும் புகார் அளித்தாலும், போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. இரவு வேளையில், பெற்றோர் அருகில் உறங்கும் குழந்தைகளையும், கூட்ட நெரிசல் சமயத்தில், காணாமல் போனவர்களையும் கண்டுபிடிக்க, பாதுகாப்பு பிரிவினர் மற்றும் போலீசார் திணறி வருகின்றனர். கடந்த ஆண்டு, திருமலையில் காணாமல் போன சென்னையை சேர்ந்த, மூன்று வயது சிறுவன் பிரத்யுத்தை, இன்று வரை கண்டுபிடிக்கவில்லை.
மூன்று நாட்களுக்கு முன், நடைபாதை வழியில் காணாமல் போன, ஐந்து வயது சிறுமி ரோஷினியை கடத்திச் சென்றவன் குறித்த, புகைப்பட தகவல் கிடைத்தும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருமலைக்கு வரும், வி.வி.ஐ.பி.,க்களின் தரிசன ஏற்பாட்டையும், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் வசதிகளையும் கவனிக்கவே, போலீசாருக்கு நேரம் போதவில்லை. இதனால், பக்தர்களிடம் விலை உயர்ந்த பொருட்கள், ரொக்க பணம் திருடு போவது அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்கள் குறித்து, உறவினர்கள் தகவல் அளித்த உடனே, தேடியிருந்தால், பலன் கிடைக்க வாய்ப்பு அதிகம். ஆனால், போலீசாரிடம் புகார் அளிக்க சென்றால், "உங்களால் முடிந்தவரை தேடி பாருங்கள்; கிடைக்கவில்லை என்றால், அப்போது புகார் அளிக்க வாருங்கள்' என்று அறிவுரை கூறி, அவர்களை அனுப்பி விடுகின்றனர்.
வருகிறது. தேவையான பாதுகாப்பு ஏற்பாடு இருந்த போதிலும், காணாமல் போனவர்களை கண்டு பிடித்ததாக, இதுவரை தகவல் இல்லை.உலகளவில் பிரசித்தி பெற்ற திருமலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட, டவுன் ஒன்று, டவுன் இரண்டு என, இரண்டு காவல் நிலையங்கள் உள்ளன. இது தவிர, கிரைம் மற்றும் சட்டம் - ஒழுங்கு என, இரண்டு போலீஸ் பிரிவுகளும் உள்ளன. இப்பணிகளை கவனிக்க, 400 முதல், 450 போலீசார் உண்டு. ஆனால், தினசரி, 200 போலீசார் மட்டுமே, பணியில் இருப்பர். விழா காலங்களில், 1,000 போலீசாரும், பிரமோற்சவ விழா காலத்தில், 4,000 போலீசாரும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதுதவிர, ராணுவத்தை சேர்ந்த, "ஆக்டோபஸ்' என்ற படைப்பிரிவு, விஜிலென்ஸ், சிறப்பு போலீஸ் படை, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட, வி.வி.ஐ.பி.,க்கள் வரும் போது, காட்டு பகுதியில் சென்று சோதனை செய்ய தனிப்பிரிவு என, திருமலையில், பாதுகாப்பு பணியில் போதிய அளவில், ஆட்கள் உள்ளனர். எனினும், திருட்டு, குழந்தைகள் கடத்தல், பெரியவர்களே காணாமல் போவது போன்ற சம்பவங்கள், அடிக்கடி நடந்து வருகின்றன. அந்த வகையில், டவுன் - 1 காவல் நிலையத்தில், 300 வழக்குகளும், டவுன் - 2 காவல் நிலையத்தில், 243 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

திருமலை முழுவதும், 2,000 கண்காணிப்பு கேமராக்களை தேவஸ்தானம் பொருத்தி உள்ளது. ஆனால், அதிக திருட்டு சம்பவங்கள் நடைபெறும், முடி காணிக்கை அளிக்கும், "கல்யாண கட்டா' பகுதி, சப்தகிரி வாடகை அறைகள் உள்ள பகுதி, பக்தர்கள் தங்கும் மண்டபம் ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. ஒரு சில இடங்களில் இருந்த போதும், அது சரியாக இயங்காத நிலையிலேயே இருக்கும். திருமலையில், கம்ப்யூட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை, ஜி.எம்.ஆர்., குழுமம் பராமரித்து வருகிறது. கண்காணிப்பு கேமராக்களில் பழுது ஏற்பட்டால், அதை சரி செய்ய, ஜி.எம்.ஆர்., குழுமம் தயாராக உள்ளது. ஆனால், அதற்கு அனுமதி அளிக்காமல், தேவஸ்தான நிர்வாகம் அமைதி காக்கிறது. திருமலையில் காணாமல் போனவர்கள் பற்றி புகார் கிடைத்தவுடன், போõலீசுக்கு உடனே தகவல் தெரிவிக்க, ஒரு தனி குழுவை அமைக்க வேண்டும். பொருட்களை திருடர்களிடம் பறி கொடுத்தவர் அளிக்கும் ஆதாரத்தின் அடிப்படையில் செயல்பட்டால், சுலபமாக இதற்கு ஒரு வழி பிறக்கும். தேவஸ்தான நிர்வாகம், இதற்கு முயற்சி எடுக்க வேண்டும். பக்தர்களுக்கும், போலீசுக்கும் இடையே, பாலமாக செயல்பட, ஒரு தனிக் குழுவை ஏற்படுத்தினால், இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைப்பது உறுதி.dinamalar.com

கருத்துகள் இல்லை: