வெள்ளி, 14 ஜூன், 2013

சரியான சினிமாகாரன் சத்யராஜ் சொல்வதெலாம் பொய்

புரட்சித் தமிழன் என்று தன்னைத் தானே அழைத்து மகிழும் சத்யராஜ், முன்பெல்லாம் பிறமொழி நடிகர்கள் மீது காட்டிய துவேஷம் இருக்கிறதே... அதை எழுத கையும் கூசும். மேடையில் ஒரு பிற மொழி நடிகரைப் பற்றிப் பேசிவிட்டு, இருக்கையில் வந்தமர்ந்ததும் மிகக் கேவலமாகத் திட்டுவது அவர் பாணி. நாம் தமிழர் மாதிரி ஏதாவது அரசியல் மேடை கிடைத்துவிட்டாலோ, 'தமிழர் அல்லாத நடிகர்கள் எதுக்கு சென்னையில் இருக்கணும்...... அவர்களை ஓட ஓட விரட்டணும்... வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்னு இனி யாரும் சொல்லக் கூடாது. இனி விரட்டிப் பழகுங்க' என்பார் (அவரோட இந்தப் பாலிசி ஹீரோயின்களுக்குப் பொருந்தாது. அப்புறம் நமீதா கவர்ச்சிக் குதிரைகளுக்கு எங்கே போவார்?). அட அவ்வளவு ஏன், முன்பு அவர் பிஸியாக இருந்த காலத்தில், 'தமிழ்தான் எனக்கு எல்லாம். வேற மொழி தெரியாது. அதனால வேற எந்த மொழியிலும் நான் நடிக்க மாட்டேன். எனக்கு அதற்கு அவசியமில்லை,' என்றெல்லாம் அடித்துவிட்டுக் கொண்டிருந்தார். எதற்கு இவ்வளவு பெரிய முன்னுரை என்கிறீர்களா... சமீபத்தில் நடந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் பிரஸ் மீட்டில் அவர் பேசியதைப் படியுங்கள்.. "இப்போது வேறு மொழிப் படங்களில் நடிக்கிறேன். கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடிக்கும்போதுதான் மொழி தெரியாத படங்களில் நடிப்பது எவ்வளவு சிரமம் என்பது புரிகிறது. தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கும்போது, இன்னொருவர் உதவியுடன்தான் வசனம் பேசி நடிக்க முடிகிறது. அதனால் தமிழ் தெரியாத நடிகர்களை கிண்டல் செய்வதை நிறுத்திக்கொண்டேன். யாரும் எந்த மொழியிலும் நடிக்கலாம்," என்றார் சத்யராஜ். அடேங்கப்பா... தனக்குன்னு வந்தாதான் தமிழ் உணர்வுக்கே தனி அர்த்தம் கிடைக்குது போல!
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: