ஞாயிறு, 9 ஜூன், 2013

கோவை: 30 பள்ளிகள் அங்கீகாரம் ரத்து! அடிப்படை வசதிகள் இல்லை

கோவை மாவட்டத்தில், அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வந்த, 30 பள்ளிகளின் அங்கீகாரத்தை, அதிரடியாக ரத்து செய்து, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், அரசின் அனுமதி பெறாமலும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும் பல பள்ளிகள் செயல்படுகின்றன. மாவட்ட கல்வி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வைத் தொடர்ந்து, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு, உரிய முன்னெச் சரிக்கை தகவல், போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது.கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள், நாளை துவங்க உள்ள நிலையில், இதுவரை, அடிப்படை வசதிகளை மேம்படுத்தாத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதாக, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி கணேசமூர்த்தி,; ‘’கடந்த மே மாதம், 12 பள்ளிகள், தற்போது, 18 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், பள்ளிக்கு அருகில் உள்ள, வேறு பள்ளிகளில் சேர்க்கப்படுவர். தொடர்ந்து, பள்ளியை நடத்த நிர்வாகம் முற்பட்டால், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; மேலும், தொடர்ந்தால், நாள் ஒன்றுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன், துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள் ளப்படும்’’என்று கூறினார்

கருத்துகள் இல்லை: