வியாழன், 13 ஜூன், 2013

திமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் கிடப்பில் தான் போடப்படும் ! துக்ளக் ஆட்சியில் நல்லதா நடக்கும் ?

ஸ்டாலின் : அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த இந்த 2 ஆண்டுகளில் பல திட்டங்கள்
நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். சட்டமன்றத்தில் ஜனநாயகம் காக்கப்படுகிறதா? என்றால் இல்லை. தி.மு.க ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்விக்கு தடை போட்டார்கள். ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு நீதிமன்ற தீர்ப்புபடி சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. அதன் காரணமாக கடந்த 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் பல திட்டங்கள் மக்களை சென்றடைந்தன. ஆனால் இந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கோவையில் ஜவுளி தொழில் மேம்பாட்டுக்காக பல்லடத்தில் ரூ.200 கோடியில் விசைத்தறி பூங்கா மத்திய அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டது. கோவை பீளமேட்டில் ரூ.300 கோடியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் சாலை ரூ.50 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அத்திகடவு 2-வது கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. குறிச்சிகுனியமுத்தூர், ஆழியார் கூட்டு குடிநீர் திட்டம் ரூ.40 கோடியில் கொண்டு வரப்பட்டது. வடவள்ளி கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. குடிசைமாற்று வாரியம் மூலம் ரூ.150 கோடியில் 4500 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டவை பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் கிடப்பில் உள்ளது. விவசாயிகள் பிரச்சினைக்காக தென்னை வாரியம் அமைத்து தேங்காய் ரூ.5 ல் இருந்து ரூ.10 ஆக விற்கப்பட்டது. இன்று வாரியம் செயல்படவில்லை. மீண்டும் தேங்காய் ரூ.5-க்கு விற்கப்படுகிறது. கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்ட போது ரூ.250 கோடியில் சாலைகள் போடப்பட்டன. அவினாசி 6 வழிச்சாலை, திருச்சி 4 வழிச்சாலை ஏற்படுத்தப்பட்டது. குறிச்சி, இருகூர், சோமனூர் பகுதிகளில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. ரூ.180 கோடியில் காந்திபுரம் மேம்பாலம் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறை வெள்ளலூருக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது கிடப்பில் போடப்பட்டுள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்த நேரத்தில் வருகிறதோ? அல்லது அதற்கு முன் வருகிறதோ தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக சட்டமன்ற தேர்தல் வந்தால் நல்லது என்று மக்கள் நினைக்கிறார்கள். இந்த பாராளுமன்ற தேர்தல் வெற்றி சட்டமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக இருக்கும். எனவே பாராளுமன்ற தேர்தலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அதன் மூலம் தி.மு.க. வுக்கு வெற்றி தேடிதரவேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

கருத்துகள் இல்லை: