
முன்னதாக மோடிக்கு எதிராக திடீரென திரும்பிய அத்வானி, கோவா தேசிய செயற்குழுக் கூட்டத்தின் 2நாள் நிகழ்விலும் பங்கேற்கவில்லை. பாஜக தொடங்கப்பட்ட பிறகு அவர் முதல் முறையாக இப்போதுதான் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கூட்டத்தின்போது மோடி அறிவிப்பை ராஜ்நாத் சிங் அறிவித்தபோது அவருக்கு அருகே அமர்ந்திருந்த அத்வானியின் முக்கிய சிஷ்யர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் இறுகிய முகத்துடன் காணப்பட்டார். மேலும், மோடி நியமனத்தை வரவேற்று தொடர்ந்து கைத்தட்டல் நீடித்தபோதும் சுஷ்மாவின் முகத்தில் ஈயாடவில்லை.
முன்னதாக மோடி நியமனத்தை வெளியிட்டு ராஜ்நாத் சிங்கூறுகையில், ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் என்பதுமிகப் பெரிய சவால். இந்த நிலையில், குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை, பாஜக தேசிய பிரசாரக் கமிட்டியின் தலைவராக நியமிக்கிறேன் என்று அறிவித்தார். இதற்கிடையே, அத்வானி கூட்டத்தில் பங்கேற்காதநிலையில் மோடி அறிவிப்பை வெளியிடலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இன்று காலை வரை ராஜ்நாத் சிங் இருந்ததாக கூறுகிறார்கள். இருப்பினும் பாஜகவுக்கு அருளாசி புரிந்து வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையிடமிருந்து பச்சைக்கொடி வந்ததைத் தொடர்ந்து மோடி அறிவிப்பை வெளியிட முடிவு செய்தார் ராஜ்நாத் சிங் என்று கூறப்படுகிறது.
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக