திங்கள், 17 செப்டம்பர், 2012

சினிமா நடிகைக்கு கொடுத்தது எவ்வளவு : ஈமு பண்ணை உரிமையாளர்

Actor Sarathkumarகோவை: "சுசி' ஈமு பண்ணை உரிமையாளர் குரு, பணத்தை வாரி இறைத்து, உல்லாசமாக வாழ்ந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஈரோடு
In a first such case in Tamil Nadu, well known Tamil actors Sarathkumar and Sathyaraj, both brand ambassadors of Susi Emu Farms in Perundurai which had allegedly defaulted in settling the dues of depositors, were on Tuesday booked on charges of “criminal conspiracy.”
The film stars had appeared in advertisements endorsin பெருந்துறையிலுள்ள, "சுசி' ஈமு நிறுவனத்தில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், 200 கோடி ரூபாய்க்கு மேல், முதலீடு செய்துள்ளனர். இந்நிறுவனம் மூடப்பட்டதை தொடர்ந்து, கோவை, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், முதலீட்டாளர்கள் புகார் செய்தனர்.
"சுசி' ஈமு உரிமையாளர் குருசாமியை, கைது செய்த போலீசார், ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில், அவர் தெரிவித்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது: குருசாமி கல்லூரி பருவத்தில், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்துள்ளார். குருசாமியிடம் பணம் இல்லாததால், அந்த பெண் உதாசீனப்படுத்தியுள்ளார். மனமுடைந்த குருசாமி, பணக்காரன் ஆக ஆசைப்பட்டுள்ளார். முதலீடு இல்லாமல் தொழில் துவங்குவது பற்றி, "இன்டர்நெட்' மூலம் தகவல்களை தேடினார். அப்போது, ஈமு கோழி வளர்ப்பு பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.
குஞ்சுகளை எங்கு வாங்குவது, எப்படி வளர்ப்பது, மார்க்கெட்டிங் செய்வது பற்றிய விபரங்களை சேகரித்தார். அதன்பின், விவசாயிகளை ஈர்க்க, கவர்ச்சி விளம்பரங்களை செய்துள்ளார். முதலீடு அதிகரித்ததால், மாநிலம் முழுவதும், 30 கிளைகளை துவக்கினார். கோடிக்கணக்கில், பணம் வசூலானதும், அந்த பணத்தை, ரியல் எஸ்டேட், எக்ஸ்போர்ட் பிசினஸ்களில் முதலீடு செய்துள்ளார். மனைவி பெயரில் புதுச்சேரியில், "ரெஸ்டாரென்ட்' துவங்கியபோது, அங்குள்ள முக்கிய அரசியல் பிரமுகர் திறந்துவைத்தார்.

டில்லி, மும்பையில் "ரெஸ்டாரென்ட்' துவங்கியபோது, காங்., கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் திறந்து வைத்துள்ளனர். "சுசி' ஈமு திட்டத்தை விளம்பரப்படுத்த, "உயர்ந்த' நடிகர், "புன்னகை' நடிகை ஆகியோருக்கு, தலா 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

கோடம்பாக்கத்திலுள்ள இணை இயக்குனர்கள் பலர் நண்பர்களானதால், சினிமா தயாரிப்பில் முதலீடு செய்ய, குருவுக்கு அட்வைஸ் செய்துள்ளனர். சினிமா எடுக்கும் ஆசையில், இணை இயக்குனர்களுடன் மும்பைக்குச் சென்று, "லொக்கேஷன்' பார்த்துள்ளார். சினிமா நடிகர், நடிகைகள் தொடர்பு, அரசியல் தொடர்பு இருந்ததால், மக்களிடம் வசூலித்த பணத்தை வாரி இறைத்துள்ளார்.இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.


னிமா "டயலாக்': குரு வாக்குமூலம் கொடுத்தபோது, "நான் வாழ்க்கையில், கீழ் மட்டத்தில் இருந்தவன்; இப்போது கோடிக்கணக்கில் பணம் உள்ளது. வங்கிக் கணக்கு, வாங்கி போட்ட நிலங்கள், முதலீடுகள் அனைத்தையும் ஒப்படைத்து விடுகிறேன். பழைய நிலைக்கு கீழே விழுந்தாலும், மீண்டு(ம்) வருவேன் என்ற, நம்பிக்கையுள்ளது' என்று சினிமா பாணியில், "டயலாக்' பேசியதாக போலீசார் தெரிவித்தனர்தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை: