வெள்ளி, 21 செப்டம்பர், 2012

ஹன்ஸிகா! நிலைமை இப்படி ஆயிடுச்சே

ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் தொடர்ச்சியாக சிங்கம் 2 உருவாவதால் அனுஷ்காவும் இந்த படத்தில் நடிக்கிறார். ஹன்ஸிகா மோத்வானி பள்ளி மாணவியாக முக்கிய கேரக்டரில் நடித்தாலும், குறுகிய காலத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்து ஹீரோயின் என்ற அந்தஸ்துக்கு வந்துவிட்டார்.
நடிக்க வந்து பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்ட அனுஷ்காவுடன் நடிப்பதால் நீ இந்த படத்தில் இரண்டாம் கதாநாயகி என்ற ஸ்தானத்தில் தான் இருக்கிறாய் என யாரோ கொளுத்திப் போட ஹன்ஸிகா இப்போது பார்ப்பவர்களிடமெல்லாம் பொரிந்து தள்ளிக்கொண்டும், என் நிலைமை இப்படி ஆயிடுச்சே என்று புலம்பிக்கொண்டும் இருக்கிறாராம்.
ஹன்ஸிகா பல படங்களில் மற்ற நடிகைகளுடன் திரையை பகிர்ந்து கொண்டிருந்தாலும் இப்போது ஏனோ சூடாகிவிட்டார். இங்கு இப்படி ஒன்று நடந்து கொண்டிருக்க விஷ்ணுவர்தன் படத்தில் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் நயன்தாராவும், டாப்ஸியும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நல்ல நட்புடன் நடித்துவருவதாக கோடம்பாக்கமே புகழ்கிறது.

கருத்துகள் இல்லை: