புதன், 19 செப்டம்பர், 2012

பஜ்ரங்தள் தலைவருக்கு சிறையில் அடி, உதை

ஆமதாபாத்: குஜராத் கலவர வழக்கில் கைதாகியுள்ள பஜ்ரங்தள் அமைப்பின் தலைவருக்கு சிறையில் அடி உதை விழுந்தது. 2002ம்- ஆண்டு குஜராத் கலவரத்தின் போது நரோடாபாட்டியா நகரில் நடந்த வன்முறையில் 97 பேர் பலியாயினர்.
இதில் தொடர்புடையதாக பா.ஜ. எம்.எல்.ஏ. மாயா கோட்னானி மற்றும் பஜ்ரங்தள் அமைப்பின் தலைவர் பாபு பட்டேல் என்ற பாபு பஜ்ராங்கியும் கைது செய்யப்பட்டார்.இவர்களுக்கு கடந்த மாதம் சிறப்பு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதில் பஜ்ராங்கி ,சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் ரத்த பரி‌சோதனைக்காக சிறை மருத்துவமனைக்கு சென்றார். அப்போது சிறையில் 2008-ம் ஆண்டு ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளிகள் சிலர் பஜ்ராங்கியை அடித்து தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சிறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: